இது உங்கள் இடம்: கல்வியில் அரசியல் நுழைந்தால் சீரழிவு நிச்சயம்!

Added : செப் 08, 2022 | கருத்துகள் (83) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, 22 பல்கலைகளின் துணைவேந்தர்களுக்கான கருத்தரங்கம், முதல்வர் ஸ்டாலின் தலைமை யில் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'மாநில அரசின் கொள்கைகளை
politics, University, MK Stalin, Stalin, DMK

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, 22 பல்கலைகளின் துணைவேந்தர்களுக்கான கருத்தரங்கம், முதல்வர் ஸ்டாலின் தலைமை யில் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'மாநில அரசின் கொள்கைகளை பின்பற்றியே துணை வேந்தர்களும், பல்கலைகளும் செயல்பட வேண்டும். அத்துடன், உலகத் தரத்துக்கு தமிழக கல்வியை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

உலகத் தரத்துக்கு, தமிழக கல்வியை உயர்த்த வேண்டுமானால், கல்வியாளர்களுக்கு முதலில் சுதந்திரம் வேண்டும். அரசியல் கயிறு கொண்டு, அவர்களின் கைகள் கட்டப்படுமானால், குண்டு சட்டியில் குதிரை ஓட்டிய கதையாகவே அமையும். அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப, துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும் என்கிறார் ஸ்டாலின். இவர்களின் கொள்கை என்னவென்று நமக்கு தெரியாதா? திராவிட மாடல், சமூக நீதி, பகுத்தறிவு என்ற பெயரில், ஈ.வெ.ரா.,வின் கொள்கையை நுழைப்பது தான்!

மேலும், ஸ்டாலின் என்ன சொல்ல வருகிறார் என்றால், துணைவேந்தர்கள் எல்லாம், அவர்கள் இஷ்டத்துக்கு கல்வித் திட்டங்களையோ, பாடங்களையோ கொண்டு வரக்கூடாது. அரசின் ஒப்புதல் பெற்றே, பாடத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும். அதாவது, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி பற்றிய பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுவே முதல்வரது பேச்சின் உள்அர்த்தம்.


latest tamil newsதி.மு.க., ஆட்சி செய்ய வந்துள்ளதா அல்லது கொள்கைகளை மடை மாற்றம் செய்ய வந்துள்ளதா? கோவில் முதல் கல்வி வரை அனைத்திலும் மூக்கை நுழைப்பது வேதனை. இதற்கு, மெத்தப் படித்த கல்வியாளர்களும் விலை போவது மிக மிக துரதிருஷ்டவசமானது.

மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில், ஆட்சியாளர்கள் கற்றாரை காமுற்று, துணைகொண்டு செம்மையான ஆட்சி தந்தனர்; இன்று தலைகீழாகி விட்டது. கற்றார் ஒதுக்கப்பட்டு, அரசியல் வாதிகள் சொல்படி சேவகம் செய்ய வேண்டியுள்ளது.

'மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ' என்று நெஞ்சு நிமிர்த்தும் தன்மானம் இங்கில்லை. 'ஆட்சியாளர்களே! நீங்கள் சொல்வது தவறு' என்று சுட்டிக்காட்டி இடித்துரைக்கும் துணிவும் குறைவு. 'வேட்பன சொல்லி வினையில் எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்ல விடல்' --என்கிறது பொய்யாமொழி. அதாவது, அரசன் விரும்புவதை சொல்லி, பயனில்லாதவற்றை அவன் கேட்டாலும், ஒரு போதும் சொல்லாதிருக்க வேண்டும் என்பது பொருள்.

ஆனால், இங்கு நடப்பது என்ன? 'நான் பேச நினைப்பதை எல்லாம், நானே தான் பேசுவேன்' என்ற ரீதியில் முதல்வர் பேச, 'ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு...' என்ற நிலையில் துணைவேந்தர்கள். இதற்கு பெயர் கருத்தரங்கமா... புரியவில்லை. இனி, பாடப் புத்தகங்களில் கேள்விகள் இப்படித் தான் இருக்கும்.
* கருணாநிதி நினைவாக வைக்கப்படும் பேனாவின் உயரம் என்ன?
* ஈ.வெ.ரா.,வை தந்தை பெரியார் என்று அழைக்க காரணம் என்ன?
* அண்ணாதுரை சென்று வந்த வெளிநாடு எது?
படித்தவன் அரசியலில் இருந்தால் நாட்டுக்கு விமோசனம்; கல்வியில் அரசியல் நுழைந்தால் சீரழிவு நிச்சயம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
09-செப்-202201:04:58 IST Report Abuse
Duruvesan விடியல் சார் எடுப்பட்ட பயலுக என்னமா போட்டோ எடுத்து கீரனுங்க, 😟
Rate this:
Cancel
08-செப்-202220:25:46 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் ONRIYA அரசு தரவுகள் படி ஜூன் 2022ல் இந்தியாவின் பணவீக்கம் 7.01 சதவீதமாக இருந்த போது தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.08 சதவீதமாக இருந்தது. இதேபோல் ஜூலை 2022ல் இந்தியாவின் பணவீக்கம் 6.71 சதவீதமாக இருந்த போது தமிழ்நாட்டின் பணவீக்கம் 4.78 சதவீதமாக இருந்தது.
Rate this:
Cancel
08-செப்-202219:37:06 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் ராகுலின் நடைப்பயணத்தை விமர்சனம் செய்யும் தகுதி கொஞ்சம் கூட இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X