மெட்ரிக், தொடக்கக் கல்வி அலுவலகங்கள் ரிபீட்டு...; அ.தி.மு.க., திட்டத்தை மாற்றுது ஆளும்கட்சி

Updated : செப் 08, 2022 | Added : செப் 08, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை : மதுரையில் கல்வித்துறையில் நீக்கப்பட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஐ.எம்.எஸ்.,), மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது.அ.தி.மு.க., ஆட்சியில் நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. மெட்ரிக், தொடக்கக் கல்வி இயக்குனரகங்கள் நீக்கப்பட்டன. மெட்ரிக், தொடக்க பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலரே
 மெட்ரிக், தொடக்கக் கல்வி அலுவலகங்கள் ரிபீட்டு...;  அ.தி.மு.க., திட்டத்தை மாற்றுது ஆளும்கட்சி



மதுரை : மதுரையில் கல்வித்துறையில் நீக்கப்பட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஐ.எம்.எஸ்.,), மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது.

அ.தி.மு.க., ஆட்சியில் நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. மெட்ரிக், தொடக்கக் கல்வி இயக்குனரகங்கள் நீக்கப்பட்டன. மெட்ரிக், தொடக்க பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலரே (டி.இ.ஓ.,) ஆய்வு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

ஐ.எம்.எஸ்., மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (டி.இ.இ.ஓ.,) பதவிகள் ரத்து செய்யப்பட்டன.இதற்கிடையே பள்ளிகள் எண்ணிக்கை அடிப்படையில் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கூடுதலாக ஒரு மாவட்ட கல்வி அலுவலகம் (டி.இ.ஓ.,) புதிதாக ஏற்படுத்தப்பட்டது.

இதில் திருமங்கலம் கல்வி மாவட்டம் உருவானது. இந்நிலையில் தற்போதைய தி.மு.க., ஆட்சியில் மெட்ரிக், தொடக்க கல்வி இயக்குனரகங்கள் மீண்டும் தனியாக செயல்படும் வகையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னையில் செப்.,10ல் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. இதன் மூலம் மதுரையில் ஐ.எம்.எஸ்., டி.இ.இ.ஓ., அலுவலகங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
08-செப்-202208:14:54 IST Report Abuse
duruvasar தமிழ்நாட்டை குட்டி சுவராஜ் குத்து என்று கொள்கை பிடிப்புள்ள திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் கொள்கையை செயல்படுத்தும் வழிமுறை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X