சீக்ரெட் சிங்காரம்

Added : செப் 08, 2022 | |
Advertisement
மீண்டும் வார்த்தை போர்!காவிரி பாயும் மாவட்டத்தின் எம்.பி.,யான நாட்டாமை மனைவி, ஏற்கனவே புல்லுக்கட்டு ஆளுங்கள ஒரு வழி பண்ணி இருந்தாங்க. அவங்க அசெம்பிளி தொகுதிக்குள்ள போயி, பல கூட்டமெல்லாம் நடத்தி புல்லுக்கட்டு எம்.எல்.ஏ.,க்கள் வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டாங்க.கொஞ்ச நாள் அமைதியாக இருந்த நாட்டாமை மனைவி, இப்போ மறுபடியும் அவங்களை சீண்ட ஆரம்பிச்சிட்டாங்க. சமீபத்துல,மீண்டும் வார்த்தை போர்!

காவிரி பாயும் மாவட்டத்தின் எம்.பி.,யான நாட்டாமை மனைவி, ஏற்கனவே புல்லுக்கட்டு ஆளுங்கள ஒரு வழி பண்ணி இருந்தாங்க. அவங்க அசெம்பிளி தொகுதிக்குள்ள போயி, பல கூட்டமெல்லாம் நடத்தி புல்லுக்கட்டு எம்.எல்.ஏ.,க்கள் வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டாங்க.கொஞ்ச நாள் அமைதியாக இருந்த நாட்டாமை மனைவி, இப்போ மறுபடியும் அவங்களை சீண்ட ஆரம்பிச்சிட்டாங்க. சமீபத்துல, தொகுதி பக்கம் போயிருந்தப்போ அதிகாரிகள் கூட்டம் நடத்தினாரு. அப்போ அவரு பேசும் போது, 'அரசு மேல 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு இருக்கு. ஆனா இவங்களோ 500 பர்சன்டேஜ் கமிஷன் கேட்கறாங்க. கமிஷன் வெட்டினாத்தான் ஒப்பந்ததாரர்கள் எல்லாம் வேலையே பார்க்க முடியும். இல்லன்னா முடியாது'ன்னு புல்லுக்கட்டு எம்.எல்.ஏ.,க்கள் மேல புதுசா ஒரு குண்ட துாக்கி போட்டு இருக்காங்க.அந்த அம்மணி ஒவ்வொரு முறை தொகுதிக்குள்ள வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு குண்டை துாக்கி போடறாங்க. இவங்க அலப்பறை தாங்க முடியலையேன்னு, புல்லுக்கட்டுக்காரங்க கிடந்து புலம்புறாங்க.10 பேருக்கு டார்க்கெட்!கர்நாடகாவுல தாமரை கட்சிக்கு 150 சீட் 'டார்க்கெட்' கொடுக்கப்பட்டிருக்கு. இந்த இலக்கை எட்டி பிடிக்கணும்னா, குறைந்தபட்சம் மத்த கட்சியில இருந்து 10 எம்.எல்.ஏ.,க்களையாவது கட்சிக்குள்ள கொண்டு வரணும்னு சமீபத்துல வந்த டில்லி தலைவரு சொல்லி இருக்காராம்.சமீபத்துல டில்லிக்கு போன முன்னாள் முதல்வரு கூட கட்சிக்கு வர தயாராக இருக்கும் சில எம்.எல்.ஏ.,க்களின் லிஸ்டை கொடுத்திருக்கிறாராம். இதே விஷயம், கோர் கமிட்டிலயும் பேசப்பட்டிருக்கு. கட்சி தாவ தயாரா இருக்கிற எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் ரெண்டு கண்டிஷன் போடுறாங்களாம். கண்டிப்பா சீட் வேண்டும்; ஜெயிச்சா அமைச்சர் பதவி, அதோடு தங்களோட மாவட்டத்தை பிரிச்சி, புது மாவட்டத்தை உருவாக்கணுமுன்னு சொல்றாங்களாம்.இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா வருவோம்னு சொல்லி இருக்காங்க. இந்த விஷயம் கோர் கமிட்டிலயும் பேசப்பட்டிருக்கு. அப்போ இந்தளவுக்கு கண்டிஷன் இல்லாதவங்களை இழுக்கணுமுன்னு சொல்லி இருக்காங்களாம். குறிப்பாக பழைய மைசூரு, கர்நாடகாவின் வடக்கு, தேங்காய் மாவட்டம், சர்க்கரை நாடு மாவட்டத்துலதான் கட்சி வீக்கா இருக்கு. அங்க இருக்கிறவங்களுக்கு வலை வீசுங்கன்னு சொல்லி இருக்காங்களாம். அதனால கட்சி தலைவர்கள் வலை வீசி, மீனுக்காக காத்திருக்கிறாங்களாம்.ஓட்டு கிடைக்குமா?மடாதிபதி ஒருத்தரு, பாலியல் வழக்குல கைது பண்ணப்பட்டு இருப்பது அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கைதானது முக்கியமான சமுதாயத்தை சேர்ந்தவங்க மடம் அப்படீங்கறதால, இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளும் கவனமா அடியெடுத்து வைக்கிறாங்க. இந்த விஷயத்துல கருத்து தெரிவிக்கவும் தயக்கம் காட்டுறாங்க.குறிப்பா, கதர் கட்சிக்காரங்களுக்குதான் நெருக்கடி அதிகமாயிட்டு வருது. ஏன்னா மாநில தலைவரு தான் மேலிட இளம் தலைவரை அழைச்சிட்டு வந்து தீட்சை எல்லாம் வாங்கி கொடுத்திருக்காரு.அதேபோல பாலியல் புகார் கொடுத்த மாணவியர்களும் தலித் குடும்பத்தை சேர்ந்தவங்களாம். அதனால் தலித் அமைப்புகள், மடாதிபதி மேல நடவடிக்கை எடுக்கணும்னு சொல்றாங்க. இதனால அவங்க ஓட்டு தங்களுக்கு கிடைக்காம போயிடுமோங்கற பயம், கதருக்கு வந்திருக்காம்.எதிர்க்கட்சி தலைவரோட ஆதரவாளர்கள்ல ஒரு தரப்பும் மடாதிபதிக்கு ஆதரவாக இருப்பதும், அந்த கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்காம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X