பள்ளி மாணவர்களுக்கு செப்.15ல் சைக்கிள் போட்டி| Dinamalar

பள்ளி மாணவர்களுக்கு செப்.15ல் சைக்கிள் போட்டி

Added : செப் 08, 2022 | |
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் செப்.15ல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது. இதற்காக ஒரு மாவட்டத்திற்கு ரூ.1 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ராமநாதபுரத்தில் செப்.15ல் நடக்கும் சைக்கிள் போட்டியில் 13 வயது பிரிவில் மாணவர்கள்- 15 கி.மீ., மாணவி-கள் 10 கி.மீ., சைக்கிள் ஓட்ட வேண்டும். 15- 17 வயதிற்குட்பட்ட பிரிவில்



ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் செப்.15ல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது. இதற்காக ஒரு மாவட்டத்திற்கு ரூ.1 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ராமநாதபுரத்தில் செப்.15ல் நடக்கும் சைக்கிள் போட்டியில் 13 வயது பிரிவில் மாணவர்கள்- 15 கி.மீ., மாணவி-கள் 10 கி.மீ., சைக்கிள் ஓட்ட வேண்டும். 15- 17 வயதிற்குட்பட்ட பிரிவில் மாணவர்கள்- 20 கி.மீ., மாணவிகள்- 15 கி.மீ., சைக்கிள் போட்டி நடக்கிறது.



ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர்., நான்கு வழிச்சாலை பிரிவில் தொடங்கி, மதுரை ரோடு, பாப்பாக்குடி பஸ் ஸ்டாப், நயினார்கோவில் வளைவிற்கு சென்று, மீண்டும் இ.சி.ஆர்., சாலைக்கு திரும்பி வர வேண்டும். இந்தியாவில் தயாரித்த சாதாரண சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும்.முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2வது பரிசு ரூ.3000, 3வது பரிசு ரூ.2000, 4 முதல் 10 வது இடம் வருபவர்களுக்கு தலா ரூ.250 பரிசு வழங்கப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளியின் தலைமையாசிரியரிடம் வயது சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகலுடன் செப்.15ல் காலை 6:00 மணிக்கு போட்டி தொடங்கு இடத்திற்கு வரவேண்டும், என மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X