மின் துறை குறித்து வெள்ளை அறிக்கை; அரசுக்கு சித்தராமையா வேண்டுகோள்

Added : செப் 08, 2022 | |
Advertisement
பெங்களூரு-''கடந்த 15 ஆண்டுகளாக மின்சாரத் துறையில், என்னென்ன நடந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்,'' என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:மின்சாரத் துறை அமைச்சர் சுனில்குமார், எங்கள் ஆட்சியில் விவசாய பம்ப் செட்களுக்கு மீட்டர் பொருத்த திட்டமிட்டதாகவும், மாநிலத்தின் மீதும், மின்சாரத்துறை மீது கடன்



பெங்களூரு-''கடந்த 15 ஆண்டுகளாக மின்சாரத் துறையில், என்னென்ன நடந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்,'' என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:மின்சாரத் துறை அமைச்சர் சுனில்குமார், எங்கள் ஆட்சியில் விவசாய பம்ப் செட்களுக்கு மீட்டர் பொருத்த திட்டமிட்டதாகவும், மாநிலத்தின் மீதும், மின்சாரத்துறை மீது கடன் சுமையை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டிஉள்ளார். எங்கள் அரசு, பம்ப் செட்களுக்கு மீட்டர் பொருத்துவதாக, அமைச்சரவையில் முடிவு செய்திருந்தால், அது எந்த நாளிதழில் வெளியானது, எத்தனை விவசாயிகளுக்கு தொந்தரவு கொடுத்தோம் என்பதற்கு, மின்சாரத்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி அரசு, புதிய மின்சார சட்டத்தை அமல்படுத்தி, விவசாய பம்ப் செட்களுக்கு மீட்டர் பொருத்த திட்டமிட்டுள்ளது. எந்த காரணத்துக்காகவும், கர்நாடக விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம்.எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த போது, மின்சாரத்துறையில் அதிக அளவில் கடன் இருந்தது. முதல்வர் பதவியுடன், நிதித்துறையை நிர்வகித்த நான், கடனை அப்படியே விட்டால் மின்சாரத்துறை மூழ்கும் என நினைத்து, மின்சாரம் வினியோக நிறுவனத்தின் பாக்கி கடனை அடைத்தோம். பல ஆண்டுகளாக, மாநில அரசின் துறைகள் மின் துறைக்கு பாக்கி வைத்துள்ள மின் கட்டணத்தை வசூலித்து, சுமையை குறைத்தோம். இதையே நஷ்டத்தில் தள்ளியதாக, சுனில் குமார் கூறுகிறார். உலகத் தலைவர் என, பா.ஜ.,வினர் கொண்டாடும், பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது, ஒரு யூனிட் மின்சாரம் வாங்க, எவ்வளவு ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். இனியாவது மாநில மக்களிடம், பொய் சொல்வதை அமைச்சர் நிறுத்த வேண்டும். மக்கள் மீதான மின் கட்டண சுமையை குறைக்க வேண்டும். கூடுமானவரை சிறிய, பெரிய தொழிற்சாலைகளுக்கு, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும். வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். பா.ஜ., அரசுக்கு, மின்சாரத் துறை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், 2008 முதல் நடந்த, அனைத்து ஒப்பந்தங்கள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், விசாரணை நடத்தட்டும். 15 ஆண்டுகளாக மின்சாரத்துறையில், என்னென்ன நடந்தது என்பது குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X