ஹுக்கேரி தொகுதிக்குஇடைத்தேர்தல் இல்லை

Added : செப் 08, 2022 | |
Advertisement
பெங்களூரு-உணவு, பொது வினியோகத்துறை அமைச்சர் உமேஷ் கத்தி மறைவால், காலியான ஹுக்கேரி சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடப்பது சந்தேகம். பொதுவாக சட்டசபை, லோக்சபா தொகுதிகள் காலியானால், ஆறு மாதங்களுக்குள், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க வேண்டும் என்பது விதிமுறை. உணவுத்துறை அமைச்சர் உமேஷ் கத்தி, நேற்று முன்தினம் திடீர் மாரடைப்பால் காலமானார். இவரது தொகுதிக்கு



பெங்களூரு-உணவு, பொது வினியோகத்துறை அமைச்சர் உமேஷ் கத்தி மறைவால், காலியான ஹுக்கேரி சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடப்பது சந்தேகம். பொதுவாக சட்டசபை, லோக்சபா தொகுதிகள் காலியானால், ஆறு மாதங்களுக்குள், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க வேண்டும் என்பது விதிமுறை. உணவுத்துறை அமைச்சர் உமேஷ் கத்தி, நேற்று முன்தினம் திடீர் மாரடைப்பால் காலமானார். இவரது தொகுதிக்கு தேர்தல் நடப்பது சந்தேகம்.கர்நாடக சட்டசபைக்கு, 2023ன் மே இரண்டாம் வாரம் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. நவம்பரில் தேர்தல் முன்னேற்பாடுகள் துவங்கும். வாக்காளர் பட்டியலை தயாரிப்பது, இறுதி பட்டியலை அறிவிப்பது உட்பட, பல பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். தற்போதைய அரசு, ஆட்சி காலம் முடியும் முன்பே ஆட்சியை கலைத்து விட்டு, தேர்தலை சந்தித்தாலும் ஆச்சர்யப்பட முடியாது. 'பொது தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால், ஹுக்கேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை' என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X