பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' கட்டாயம்; ஆசிரியர்களின் வருகை கண்காணிப்பு

Added : செப் 08, 2022 | |
Advertisement
பெங்களூரு-பள்ளிகளில் ஆசிரியர்கள் நினைத்த நேரத்துக்கு வருவதை தடுக்க, 'பயோ மெட்ரிக்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 15 நிமிடத்துக்கு முன்னதாகவே வர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் ஆசிரியர்கள் நினைத்த நேரத்துக்கு வருகின்றனர்; பள்ளிக்கு வராமலேயே மொத்தமாக கையெழுத்திட்டு சம்பளம் வாங்கின்றனர். இதனால் மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படுவதாக



பெங்களூரு-பள்ளிகளில் ஆசிரியர்கள் நினைத்த நேரத்துக்கு வருவதை தடுக்க, 'பயோ மெட்ரிக்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 15 நிமிடத்துக்கு முன்னதாகவே வர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் ஆசிரியர்கள் நினைத்த நேரத்துக்கு வருகின்றனர்; பள்ளிக்கு வராமலேயே மொத்தமாக கையெழுத்திட்டு சம்பளம் வாங்கின்றனர். இதனால் மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ - மெட்ரிக் பதிவை கல்வித்துறை அதிகாரிகள் கட்டாயமாக்கி உள்ளனர். துவக்க, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 15 நிமிடம் முன்னதாகவே வர வேண்டும். விடுமுறையில் செல்ல வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன் அனுமதியை பெற வேண்டும். சம்பளம் பட்டுவாடா செய்யும் அதிகாரிகள், ஆசிரியர்களின் பயோமெட்ரிக் வருகையை 25ம் தேதிக்குள் பரிசீலிக்க வேண்டும். அதற்கேற்ப சம்பளம் அளிக்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை கமிஷனர் விஷால் கூறுகையில், “கடந்த மாதம் 12ம் தேதி மாண்டியா மாவட்டத்தின் நெல்லிக்கரே கிராமத்துக்கு அமைச்சர் நாகேஷ் திடீர் ஆய்வுக்கு சென்றிருந்தார். ''அப்போது ஆசிரியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்தனர். ஆசிரியர்களுக்காக மாணவர்கள் காத்திருந்தனர். இதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X