மொபைல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

Added : செப் 08, 2022 | |
Advertisement
புதுச்சேரி-மொபைல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழுதாவூர் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.புதுச்சேரி, குண்டுபாளையம், மாரியம்மன் கோவில் தெருவில் தனியார் மொபைல்போன் டவர் அமைக்கும் பணி நடக்கிறது.தனியார் நிறுவனம் முறையான அனுமதி பெற்று பணிகளை துவக்கினாலும், அப்பகுதி மக்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, பணிக்கு எதிர்ப்பு
மொபைல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்



புதுச்சேரி-மொபைல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழுதாவூர் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.புதுச்சேரி, குண்டுபாளையம், மாரியம்மன் கோவில் தெருவில் தனியார் மொபைல்போன் டவர் அமைக்கும் பணி நடக்கிறது.தனியார் நிறுவனம் முறையான அனுமதி பெற்று பணிகளை துவக்கினாலும், அப்பகுதி மக்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், அப்பகுதி மக்கள் 60க்கும் மேற்பட்டோர், நேற்று மதியம் 2.00 மணிக்கு வழுதாவூர் சாலை, கவுண்டம்பாளையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். டவர் அமைக்கும் பணிக்கு தடைவிதிக்க கோரி, மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.கோரிமேடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:குண்டுபாளையம் பகுதியில் மொபைல்போன் டவர் அமைப்பதால் அங்குள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இப்பணியை நிறுத்த கோரும் வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. கோர்ட் உத்தரவு வரும் வரை இந்த பணியை நிறுத்த வேண்டும். இது சம்பந்தமாக, கவர்னர், தலைமை செயலர், கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளதாக கூறினர்.மொபைல்போன் டவர் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், விதிமுறை மீறி பணி நடப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதையேற்று, மக்கள் 2.30 மணிக்கு மறியலை கைவிட்டனர். மறியலால் வழுதாவூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X