பள்ளி மாணவர் கொலை வழக்கில் மருத்துவ குழு அறிக்கை சமர்ப்பிப்புகைதான பெண் வீட்டை சூறையாடியதால் பரபரப்பு

Added : செப் 08, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
காரைக்கால், --காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணின் வீட்டை மர்ம நபர்கள் சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே, மாணவர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவக் குழுவின் அறிக்கை நேற்று அரசிடம் சமர்ப்பிக்கப் பட்டது.காரைக்கால் நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் - மாலதி தம்பதியின் மகன் பாலமணிகண்டன்,13. தனியார்
பள்ளி மாணவர் கொலை வழக்கில் மருத்துவ குழு அறிக்கை சமர்ப்பிப்புகைதான பெண் வீட்டை சூறையாடியதால் பரபரப்பு



காரைக்கால், --காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணின் வீட்டை மர்ம நபர்கள் சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே, மாணவர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவக் குழுவின் அறிக்கை நேற்று அரசிடம் சமர்ப்பிக்கப் பட்டது.காரைக்கால் நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் - மாலதி தம்பதியின் மகன் பாலமணிகண்டன்,13. தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.மாணவன் பாலமணிகண்டன் கல்வி, விளையாட்டு, கலைநிகழ்ச்சிகளில் முதல் மாணவனாக திகழ்ந்தார்.கடந்த 3ம் தேதி பள்ளியில் இருந்த மாணவன் பாலமணி கண்டன், விஷம் கலந்த குளிர்பானம் குடித்ததால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.நகர போலீசார் நடத்திய விசாரணையில், அதே வகுப்பில் பயிலும் தனது மகளுக்கு போட்டியாக இருந்ததால், கோவில்பத்து பகுதியை சேர்ந்த சகாயராணி விக்டோரியா, குளிர்பானத்தில் எலிபேஸ்ட் கலந்து, பள்ளி வாட்ச்மேன் மூலம் கொடுத்தது தெரிய வந்தது. சகாயராணி விக்டோரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


அறிக்கை சமர்ப்பிப்பு


இதனிடையே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் மற்றும் உறவினர் குற்றம் சாட்டினர்.அதையடுத்து, சிறுவனின் மரணம் குறித்து விசாரணை செய்ய மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவை நியமித்து, அரசு உத்தரவிட்டது. அந்த குழுவினர், மாணவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணை அறிக்கை சுகாதாரத் துறை இயக்குனரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மேல் நடவடிக்கைக்காக, சுகாதாரத் துறை செயலரிடம் வழங்கப் பட்டது.


வீடு சூறையாடல்


இந்நிலையில், நேரு நகர் வேட்டைக்காரன் தெருவில் உள்ள சகாயராணி விக்டோரியாவின் வீட்டை, நேற்று அதிகாலை மர்ம நபர்கள் அடித்து உடைத்தனர்.இதில் வீட்டின் முன்பக்கத்தில் இருந்த தடுப்பு சுவர் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.சகாயராணி விக்டோரியாவின் இரு பிள்ளைகளும் உறவினர்கள் வீட்டில் பாதுகாப்பாக உள்ளதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


போலீஸ் குவிப்பு


தகவல் அறிந்த போலீஸ் சீனியர் எஸ்.பி., லோகேஸ்வரன் தலைமையில் எஸ்.பி., சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.நகர போலீசார் வழக்கு பதிந்து, சகாயராணி விக்டோரியாவின் வீட்டை சூறையாடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவத்தால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கணவரை பிரிந்தவர்

சகாயராணி விக்டோரியா, கோவில்பத்து நேரு நகர் வேட்டைக்கார தெருவில் வசித்து வருகிறார்.இவரது கணவர் ஜான்சன், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தை பிரிந்து சென்று விட்டார். சகாயராணி, வீட்டிலேயே துணி தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-செப்-202209:29:52 IST Report Abuse
ராமகிருஷ்ணன் குற்றவாளியின் மதம் அரசின் ஓட்டு பிச்சையை கணக்கில் கொண்டு உள்ளதால் போலீஸ் நடவடிக்கை தாமதமாகும். தண்டனை கிடைக்க வாய்ப்பு இல்லை. மக்களின் கோபம் 😡 இதனால் மடை மாறலாம். குற்றவாளிக்கு மத பாதுகாப்பு 🔐 கிடைக்கும். திராவிட விடியல் அரசின் சட்ட திட்டங்கள் இப்படி தான் இதுவரை நடந்துள்ளது. மாற வாய்ப்பு இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X