கனியாமூர் பள்ளி கலவரம் மேலும் நான்கு பேர் கைது

Added : செப் 08, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கனியாமூர் சக்தி பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 4 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. அப்போது கலவரக்காரர்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு தீ வைத்தனர்.இதில், பள்ளி
கனியாமூர் பள்ளி கலவரம் மேலும் நான்கு பேர் கைது



கள்ளக்குறிச்சி-கனியாமூர் சக்தி பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 4 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. அப்போது கலவரக்காரர்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு தீ வைத்தனர்.இதில், பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக, சேலம் மாவட்டம், ஆத்துார் தாலுகா, வலையமாதேவி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் அருண்,24; மணி மகன் எழிலரசன்,20; போலீசாரை கற்கலால் தாக்கியதாக சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தலை சேர்ந்த ராமசாமி மகன் மோகன்,30; பங்காரத்தை சேர்ந்த தங்கராசு மகன் முத்துலிங்கம்,37; ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று கைது செய்தனர்.கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகள் மூலம் இதுவரை 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X