மதுபோதையில் தகராறுதொழிலாளி கொலை

Added : செப் 08, 2022 | |
Advertisement
அன்னுார் : சரவணம்பட்டி அருகே சக தொழிலாளியை அடித்துக் கொன்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் அடுத்த திருவையாறு, மணல் திடலை சேர்ந்த ஜெயபால் மகன் ஜெகதீசன், 32. கோவை கணபதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மூன்று மாதங்களாக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.தஞ்சாவூர் மாவட்டம், திரிபுவனம், சின்னப்பிள்ளை மகன் கார்த்திகேயன், 41. இவரும் அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து



அன்னுார் : சரவணம்பட்டி அருகே சக தொழிலாளியை அடித்துக் கொன்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் அடுத்த திருவையாறு, மணல் திடலை சேர்ந்த ஜெயபால் மகன் ஜெகதீசன், 32. கோவை கணபதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மூன்று மாதங்களாக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.தஞ்சாவூர் மாவட்டம், திரிபுவனம், சின்னப்பிள்ளை மகன் கார்த்திகேயன், 41. இவரும் அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். கார்த்திகேயன், விசுவாசபுரம், டெக்ஸ்டூல் நகரில், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
சில நாட்களாக ஜெகதீசன் அந்த வீட்டில் தங்கி உள்ளார். மதுபோதையில் தகராறு செய்த ஜெகதீசனை, கார்த்திகேயன் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பினார். ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.கோவில்பாளையம் போலீசார் ஜெகதீசனின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X