புதுச்சேரி இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

Added : செப் 08, 2022 | |
Advertisement
பெரம்பலுார் : புதுச்சேரியை சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.பெரம்பலுார் மாவட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கமல், 27. கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 'ஆன்லைன்' திருமண தகவல் பதிவு மூலம், புதுச்சேரியை சேர்ந்த இளம் பெண் பழக்கமானார்.அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, காதலித்தார். திருமண ஏற்பாடுகளை செய்யுமாறு



பெரம்பலுார் : புதுச்சேரியை சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கமல், 27. கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 'ஆன்லைன்' திருமண தகவல் பதிவு மூலம், புதுச்சேரியை சேர்ந்த இளம் பெண் பழக்கமானார்.அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, காதலித்தார். திருமண ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவித்த கமல், அவரது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைத்தார். இதை நம்பிய இளம் பெண்ணின் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
இந்நிலையில், பெற்றோர் பார்க்க விரும்புவதாக கூறி, இளம் பெண்ணை வரவழைத்த கமல், பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டார்.அதன் பின், திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், பாதிக்கப்பட்ட இளம்பெண், பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால், பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து, பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசார், நேற்று முன்தினம் கமலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X