பர்கூர் மலையில் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்: 30 பயணிகள் லேசான காயம்; 5 பேர் படுகாயம்

Added : செப் 08, 2022 | |
Advertisement
அந்தியூர்: பர்கூர் மலையில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில், ௩௦ பயணிகள் லேசான காயம், ஐந்து பேர் பலத்த காயம் அடைந்தனர். அந்தியூரில் இருந்து பர்கூர் வனப்பகுதி தாமரைக்கரை வழியாக கொங்காடைக்கு, 53 பயணிகளுடன் நேற்று மதியம், அரசு பஸ் புறப்பட்டது. டிரைவராக வெங்கிடுசாமி, கண்டக்டராக சரவணன் பணியில் இருந்தனர். மதியம், 3:30 மணியளவில் மணியாச்சிபள்ளம் வழியாக செல்லும் போது, எதிரே வந்த பைக்


அந்தியூர்: பர்கூர் மலையில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில், ௩௦ பயணிகள் லேசான காயம், ஐந்து பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அந்தியூரில் இருந்து பர்கூர் வனப்பகுதி தாமரைக்கரை வழியாக கொங்காடைக்கு, 53 பயணிகளுடன் நேற்று மதியம், அரசு பஸ் புறப்பட்டது. டிரைவராக வெங்கிடுசாமி, கண்டக்டராக சரவணன் பணியில் இருந்தனர்.
மதியம், 3:30 மணியளவில் மணியாச்சிபள்ளம் வழியாக செல்லும் போது, எதிரே வந்த பைக் மீது மோதாமலிருக்க, டிரைவர் வலது பக்கம் பஸ்சை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 30 பேருக்கு லேசான அடி, ஐந்து பேர் தலையில் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்து சென்ற பர்கூர் போலீசார், பயணிகளை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மலைப்பாதையில் உருண்ட பாறை
பர்கூர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. தாமரைக்கரை-பர்கூர் சாலை சுண்டப்பூரில், நேற்று காலை பாறை சரிந்து சாலையில் விழுந்தது. நேற்று இரவு வரை அகற்றப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறையினர் பாறையை அப்புறப்படுத்த, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சத்தியில் சாரல் மழை
சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில், நேற்று மதியம், ௩:௦௦ மணிக்கு திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. சத்தி மட்டுமின்றி
சிக்கரசம்பாளையம், புதுக்குய்யனுார், பண்ணாரி உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X