மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

Added : செப் 08, 2022 | |
Advertisement
ஆத்துார்; கீரிப்பட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.ஆத்துார், கீரிப்பட்டியில் மாரியம்மன், எல்லையம்மன் கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அக்கோவில் தேர் திருவிழா, கடந்த ஆக., 16ல் தொடங்கியது. தேர் மீது தர்மகர்த்தா உள்ளிட்ட விழா குழுவினர் அமர்ந்து வரக்கூடாது என, ஒரு தரப்பினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில்


ஆத்துார்; கீரிப்பட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
ஆத்துார், கீரிப்பட்டியில் மாரியம்மன், எல்லையம்மன் கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அக்கோவில் தேர் திருவிழா, கடந்த ஆக., 16ல் தொடங்கியது. தேர் மீது தர்மகர்த்தா உள்ளிட்ட விழா குழுவினர் அமர்ந்து வரக்கூடாது என, ஒரு தரப்பினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தேர் மீது யாரும் அமர்ந்து வரக்கூடாது என உத்தரவிடப்பட்டது.
இதனால் ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா, தாசில்தார் மாணிக்கம், டி.எஸ்.பி., ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், விழா குழுவினரிடம் நீதிமன்ற உத்தரவுப்படி தேர் திருவிழா நடத்த அறிவுறுத்தினர். அதன்படி, நேற்று மாலை, 4:30 மணிக்கு, 35 அடி உயர தேர், கோவிலில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன், ஏராளமான பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியே இழுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். வரும், 10ல், எல்லையம்மன் சுவாமி தேர் திருவிழா நடக்கிறது.
அதேபோல் மந்தைவெளி, கிழக்கு மாரியம்மன் கோவிலில், கடந்த, 1ல் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று, அக்னி கரகம், அலகு குத்தியபடி, பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர். நாளை தேரோட்டம் நடக்க உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X