க.பரமத்தியில் ஆடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுமா-? விவசாயிகள் எதிர்பார்ப்பு| Dinamalar

க.பரமத்தியில் ஆடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுமா-? விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : செப் 08, 2022 | |
க.பரமத்தியில் ஆடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகள் விவசாயம் சார்ந்த பகுதியாகும். அமராவதி ஆறு, பருவ மழை மற்றும் கிணற்று நீரை நம்பிதான் இப்பகுதிகளில் விவசாயம் நடக்கிறது. அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாதபோது, மழை தான் மானாவாரி நிலங்களுக்கு கைகொடுக்கிறது. இதனால் க.பரமத்தி,


க.பரமத்தியில் ஆடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகள் விவசாயம் சார்ந்த பகுதியாகும். அமராவதி ஆறு, பருவ மழை மற்றும் கிணற்று நீரை நம்பிதான் இப்பகுதிகளில் விவசாயம் நடக்கிறது. அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாதபோது, மழை தான் மானாவாரி நிலங்களுக்கு கைகொடுக்கிறது.
இதனால் க.பரமத்தி, அரவக்
குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் ஆடு வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. குறிப்பாக, இந்த பகுதிகளில் 1.25 லட்சம் மேச்சேரி இன ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. பருவநிலை மாற்றம் காரணமாக ஆடுகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
இது குறித்து ஆடு வளர்ப்பவர்கள் கூறியதாவது:
மாவட்டத்தின் மேற்கு பகுதியான மொஞ்சனூரில் உள்ள எல்.பி.பி., பாசனத் திட்டத்தை தென்னிலை வரை நீடித்தால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். இது, கால்நடை வளர்ப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய நிலையில் தட்பவெப்ப மாற்றம் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு, ஆடுகள் அடிக்கடி இறக்கின்றன.
இதனை தவிர்க்க, கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இதன்மூலம், ஆடுகளுக்கு ஏற்படும் நோயை உடனடியாக கண்டறிந்து, சிகிச்சை அளிக்க முடியும். மேலும், க.பரமத்தியில் ஆடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X