திறக்கப்படாத அரசு மருத்துவ கல்லூரி கேன்டீனால் நோயாளிகள் பரிதவிப்பு

Added : செப் 08, 2022 | |
Advertisement
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கேன்டீன் திறக்கப்படாமல் இருப்பதால், நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உதவியாளர்கள், வெளி நோயாளிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேன்டீன் திறக்கப்படாததால், நோயாளிகள்


கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கேன்டீன் திறக்கப்படாமல் இருப்பதால், நோயாளிகள் பரிதவித்து
வருகின்றனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உதவியாளர்கள், வெளி நோயாளிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேன்டீன் திறக்கப்படாததால், நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை பணியாளர்கள் கூறியதாவது:
மருத்துவமனை வளாகத்தில் கேன்டீனுக்கு தனியிடம் ஒதுக்கப்பட்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கேன்டீன் நடத்த டெண்டர் விடப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் அதிகம் இருந்ததால், கேன்டீன் திறக்கப்படவில்லை என காரணம் கூறி வந்தனர். ஆனால், இன்னும் கேன்டீன் செயல்படாமல் உள்ளது. சர்க்கரை உட்பட சில நோய்களுக்கு, எந்த உணவும் சாப்பிடாமல் அதிகாலையிலே பரிசோதனைக்காக வர
வேண்டியுள்ளது.
மருத்துவ கல்லுாரி வளாகத்தில் வெளியில் செயல்படும் சிறிய உணவகம், தள்ளுவண்டி கடைகளை நம்பி பொதுமக்கள், நோயாளிகள் உள்ளனர். அங்கு, விலை கூடுதலாக, சுகாதாரமற்ற உணவு
கிடைக்கிறது.
உள்நோயாளிகளுடன் தங்கியுள்ள, அவர்களது உறவினர்களும் உணவுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கேன்டீனை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X