வாய்க்காலில் அமைத்த மேடையால் அபாயம்| Dinamalar

வாய்க்காலில் அமைத்த மேடையால் அபாயம்

Added : செப் 08, 2022 | |
குமாரபாளையம் அருகே வாய்க்காலில் அமைத்த மேடையால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பஸ்நிறுத்த பகுதியில் உள்ள வாய்க்காலில், இரு இரும்பு கம்பிகளால், ஊன்றப்பட்டு, படித்துறை அருகே தனியாரால் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாய்க்காலில் வரும் செடி, கொடிகள் செல்ல வழியின்றி சிக்கி கொள்கின்றன. வாய்க்காலில் பெரியவர்கள் துணி துவைக்க



குமாரபாளையம் அருகே வாய்க்காலில் அமைத்த மேடையால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பஸ்
நிறுத்த பகுதியில் உள்ள வாய்க்காலில், இரு இரும்பு கம்பிகளால், ஊன்றப்பட்டு, படித்துறை அருகே தனியாரால் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாய்க்காலில் வரும் செடி, கொடிகள் செல்ல வழியின்றி சிக்கி கொள்கின்றன. வாய்க்காலில் பெரியவர்கள் துணி துவைக்க வரும்போது, உடன் வரும் குழந்தைகள், இந்த மேடை மீது விளையாடுகின்றனர்.
இதனால் இவர்கள் வாய்க்காலின் ஆழமான பகுதியில் தவறி விழும் அபாயம் உள்ளது. குடிமகன்கள் இதன் மீது அமர்ந்து மது குடித்து வருகின்றனர். அவர்கள் தவறி வாய்க்காலில் விழுந்தால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''இதுபோல் வாய்க்காலில் மேடை அமைக்க அனுமதி கிடையாது. அப்படி யார் போட்டிருந்தாலும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், அந்த மேடை உடனே அகற்றப்படும்,''
என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X