செய்திகள் சில வரிகளில் நாமக்கல்

Added : செப் 08, 2022 | |
Advertisement
17.64 லட்சம் ரூபாய் மதிப்பில்பஞ்., அலுவலகம் திறப்புசேந்தமங்கலம், செப். 8-சேந்தமங்கலம் அடுத்த சர்க்கார் உடுப்பத்தில், 17.64 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட பஞ்., அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. பஞ்., தலைவர் நாகராஜன், அட்மா குழு தலைவர் துரை.ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் பங்கேற்று, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். விழாவில்,



17.64 லட்சம் ரூபாய் மதிப்பில்
பஞ்., அலுவலகம் திறப்பு
சேந்தமங்கலம், செப். 8-
சேந்தமங்கலம் அடுத்த சர்க்கார் உடுப்பத்தில், 17.64 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட பஞ்., அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. பஞ்., தலைவர் நாகராஜன், அட்மா குழு தலைவர் துரை.ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் பங்கேற்று, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். விழாவில், புதுச்சத்திரம் யூனியன் பி.டி.ஓ., தனம், பஞ்., தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் கஜேந்திரன், பொருளாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல், செப். 8-
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம்
நடந்தது.
மாவட்டத் தலைவர் வேலு தலைமை வகித்தார். இணை செயலாளர் ரவிக்குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி, ஆணை வழங்க வேண்டும். சாலைப்
பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்
படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், சங்க இணை செயலாளர் ரவி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட இணை செயலாளர்கள் ரவிக்குமார், ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

டிரான்ஸ்பார்மரில் பழுது
இருட்டில் மக்கள் அவதி
எருமப்பட்டி, செப். 8-
நாமக்கல் அருகே தாதம்பட்டிமேட்டில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது, 4 நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளதால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எருமப்பட்டி யூனியன், முத்துகாப்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த, 3ம் தேதி இரவு, சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள தாதம்பட்டிமேடு என்ற இடத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள கொண்டம்பட்டி மேடு, சீரமப்பட்டி உள்ளிட்ட, மூன்று கிராமங்களுக்கு, கடந்த, 4 நாட்களாக மின் வினியோகம் இல்லை. அங்கு குடியிருக்கும் மின்சாரம் இல்லாமல், இருட்டில் கடும் அவதிப்பட்டு
வருகின்றனர்.
மேலும், மின்சாரம் இல்லாததால், மின் மேட்டார்கள் இயக்கப்படாமல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, மின்சாரா வாரிய அதிகாரிகள், பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக சரி செய்து, மூன்று கிராமங்களுக்கும் சீரான மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை
எழுந்துள்ளது.

திருட்டு வழக்கில்
வாலிபருக்கு சிறை
சேந்தமங்கலம், செப். 8-
சேந்தமங்கலம் அடுத்த சிங்களாந்தபுரம் காந்திநகரைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் வீட்டில், கடந்த, 2019ம் ஆண்டு, வீட்டின் பூட்டை உடைத்து, 19 பவுன் நகை திருட்டு போனது. இந்த சம்பவம் குறித்து, பேளுக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, மதுரை மாவட்டம், சம்பகுளம் முதல் தெரு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், 30, என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் நடந்து, நேற்று நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பளித்தார். தீர்ப்பில், நகை திருடிய பிரேம்குமாருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
முகாமில் மக்கள் தஞ்சம்
குமாரபாளையம், செப். 8-
-குமாரபாளையம் காவிரி கரையோர பகுதி வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால், கரையோர பகுதி வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மணிமேகலை வீதி, இந்திரா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதி மக்கள், நகராட்சி நடராஜா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.
அடிக்கடி இதுபோல் வெள்ளம் வந்து, பாதுகாப்பு முகாம்களில் தங்கும் சூழல் உருவாகி உள்ளதால், கரையோர மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மண்சரிவை சரிசெய்ய நடவடிக்கை தேவை
மல்லசமுத்திரம், செப். 8-
வையப்பமலையில், பிரதான சாலையில் மண்சரிவை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
மல்லசமுத்திரம் அடுத்த வையப்பமலையில் இருந்து சோமணம்பட்டி செல்லும் சாலையில், தினமும் எண்ணற்ற கல்குவாரி லாரிகள், இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் சென்று
வருகின்றன.
இந்த சாலையில் ஆங்காங்கே சாலையின் ஓரத்தில், மிகப்பெரிய அளவில் மண்சரிவு காணப்படுகிறது. எதிர்வரும் வாகனங்களுக்கு வழிவிடும் நோக்கில், வாகன ஓட்டிகள் சாலையை விட்டு சற்றுத்தள்ளி செல்லும் போது, மண்சரிவில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, மண்சரிவை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கும்பாபி ேஷகத்துக்கு
காவிரியில் வழிபாடு
குமாரபாளையம், செப். 8-
குமாரபாளையத்தில் தம்மண்ணன் வீதி பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஆக., 19ல் யாகசாலை கால்கோள் விழாவுடன் துவங்கியது. நேற்று, 2ம் நாள் யாகசாலை பூஜைகள் நடந்தன. காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதில், கர்நாடகா மாநிலம், மாதேஸ்வரன் மலை சாந்த மல்லிகார்ஜுன சுவாமிகள், சாலுரு புருஹன் மாதா உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். நகராட்சி ஆபீஸ் கட்ட திட்ட மதிப்பு தயாரிப்பு
பள்ளிபாளையம், செப். 8-
பள்ளிபாளையம் நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட, திட்டமதிப்பு தயாரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பபட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி
பாளையம் நகராட்சி சேர்மன் செல்வராஜ் கூறியதாவது:
சேலத்தில் நடந்த நகராட்சி ஆய்வு கூட்டத்தில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேருவிடம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு புதிய அலுவலகம், துாய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு, ஆற்றோரத்தில் மின் மயானம் மற்றும் பொக்லைன் வாகனம் ஆகியவை தேவை என கோரிக்கைகள் வைத்தோம். தற்போது, இதற்கான திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது, அனுமதி வந்தவுடன், புதிய நகராட்சி அலுவலக கட்டடப் பணிகள் துவக்கப்படும். அதேபோல், ஆற்றோரத்தில் பாதுகாப்பு சுவர் அமைக்கக்கோரி, நீர்
வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் நேரில் மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். ஏரி வடிகால் பகுதி: அதிகாரிகள் ஆய்வு
எருமப்பட்டி, செப். 8-
எருமப்பட்டி அருகே உள்ள சிங்களகோம்பை ஏரிக்கு, கொல்லிமலையில் பெய்த கனமழையால், காரணமாக கடந்த, 4 நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏரி, 40 சதவீதம் நிறைந்துள்ளது.
கொல்லிமலையில் தொடர்ந்து மழை பெய்வதால், 2 வாரங்களில் ஏரி முழு கொள்ளளவையும் எட்டும் நிலை உள்ளது. இதனால், இந்த ஏரியின் வடிகால் பகுதிகளில் கடந்தாண்டு நீர்வள நிலவள திட்டத்தின் சார்பில், 53.11லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட வடிகால் பகுதியின் தன்மை குறித்து, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜாராம், உலக வங்கி தரவரிசை ஆய்வக பணியாளர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, வடிகால் தரத்தினை ஆய்வு செய்தனர்.கிராம பஞ்., அலுவலகத்துக்கு
புது கட்டடம்: எம்.பி., திறப்பு
எருமப்பட்டி, செப். 8-
எருமப்பட்டி யூனியன், திப்பராமாதேவி கிராம பஞ்.,க்கு, 19 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் கொடிக்கால்புதுார் அரசு நடுநிலைப்பள்ளியில், 11 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம், ஜம்புமடையில், 13 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட பால் சொசைட்டி கட்டடம் திறப்பு விழா மற்றும் ஜம்புமடையில் குடிநீர் மேல்நிலைத் நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு அட்மா குழுத்தலைவர் பாலசுப்பரமணியன் வரவேற்றார். எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஷ்குமார் பங்கேற்று, புதிய கட்டடங்களை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதில், பஞ்., தலைவர் மாதேஸ்வரி, மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், முத்துகருப்பன், வக்கீல் அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


போலீஸ், நீதித்துறை இடையே
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
நாமக்கல், செப். 8-
நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில், போலீசார் மற்றும் நீதித்துறை இடையிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி வடிவேல் தலைமை வகித்தார். போலீசார் மற்றும் நீதித்துறை இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது குறித்தும், குற்ற வழக்குகளை விரைந்து நடத்தி முடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும், கூட்டத்தில் ஆலோசிக்கப்
பட்டது.
மாவட்ட குற்றவியல் நீதிபதிகள் செல்வராஜ், விஸ்வநாதன், நந்தினி, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் ஹரிஹரன், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் நீதிபதிகள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உள்பட பலர் கூட்டத்தில்
பங்கேற்றனர். தரைப்பாலம் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
பள்ளிபாளையம், செப். 8-
கீழ்காலனி பகுதியில் செல்லும் தரைப்பாலம் மழைநீரால் மூழ்கியதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
பள்ளிபாளையம் அருகே கீழ்காலனி பகுதியில் ரயில்வே பாலத்தின் கீழே ஓடை செல்
கிறது. இந்த ஓடையின் குறுக்கே வாகனங்கள் செல்லும் வகையில், தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக கார், லாரி, வேன், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவு சென்று வரும். கடந்த சில நாட்களாக சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை நீர் கீழ்காலனி பகுதியில் செல்லும் ஓடை வழியாக செல்கிறது. தற்போது வாய்க்கால் தண்ணீரும் இதில் தான் செல்கிறது. இதனால் ஓடையில் அதிகளவு செல்வதால், ஓடையின் குறுக்கே செல்லும் தரைப்பாலம் மூழ்கி, மேற்பரப்பில் தண்ணீர் ஆறாக செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X