பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்! கரையோர மக்களுக்கு தாசில்தார் எச்சரிக்கை

Added : செப் 08, 2022 | |
Advertisement
ப.வேலுார்: காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, ப.வேலுார் தாசில்தார் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று முன்தினம் இரவு மேட்டூர் அணையில் இருந்து, 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


ப.வேலுார்: காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, ப.வேலுார் தாசில்தார் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் காவிரி நீர்
பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று முன்தினம் இரவு மேட்டூர் அணையில் இருந்து, 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆற்றின் கரையோரம் உள்ள சோழசிராமணி, மாரப்பம்பாளையம், குரும்பல மகாதேவி, அரசம்பாளையம், ஜேடர்பாளையம் அணைக்கட்டு, ஜேடர்பாளையம் பரிசல் துறை, கண்டிப்பாளையம் பரிசல் துறை, வடகரையாத்துார், கு.அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பொத்தனுார், பரமத்தி வேலுார், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
பொதுமக்கள் யாரும் காவிரியாறு, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல் மற்றும் செல்பி எடுத்தல் உள்ளிட்ட எவ்வித காரியங்களிலும் ஈடுபடக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாதிக்கப்
படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம்-,1077, காவல்துறை-, 100, தீயணைப்பு துறை, -101, மருத்துவ உதவி-, 104, ஆம்புலன்ஸ் உதவி, -108 ஆகியவற்றிற்கும், பரமத்தி வேலுார் வட்டத்துக்கு, 94450 00546 ஆகிய எண்களில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X