தி.மு.க., பொய் பேசி வருகிறது: பழனிசாமி குற்றச்சாட்டு

Updated : செப் 08, 2022 | Added : செப் 08, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
சென்னை: நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயத்தில் தி.மு.க., பொய் பேசி வருகிறது என அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர், பழனிசாமி முதல்முறையாக ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு, நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து முன்னாள்
palanisamy, eps, edapadipalanisamy, admk, dmk,  பழனிசாமி, அதிமுக, இபிஎஸ், எடப்பாடிபழனிசாமி, திமுக

சென்னை: நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயத்தில் தி.மு.க., பொய் பேசி வருகிறது என அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர், பழனிசாமி முதல்முறையாக ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு, நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


latest tamil news


பின்னர் கட்சி தலைமை அலுவலகம் சென்ற பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அதிமுக.,வில் பிளவு என்பது கிடையாது. கட்சிக்கு களங்கம் விளைவித்தவர்கள், துரோகம் செய்தவர்கள், எதிராக செயல்பட்டவர்கள் மீது பொதுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்டால் தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள். கட்சியின் உயர்ந்த பதவி வகித்த பன்னீர்செல்வம், கொள்ளை கூட்டத்திற்கு தலைமை வகித்து ரவுடிகளை டெம்போ வேனில் வந்து போலீஸ் உதவியுடன் கதவை உடைத்தனர்.

இப்படிப்பட்டவர்களை தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள். தொண்டர்களுக்கு தான் கட்சி தவிர. தலைவர்களுக்கு அல்ல. கட்சி அலுவலகத்தை கொள்ளையடித்து சென்றால் தொண்டன் எப்படி மன்னிப்பான். தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தி கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டவர் பன்னீர்செல்வம். பச்சோந்தியை விட அதிகமாக நிறம் மாறுபவர் பன்னீர்செல்வம். திமுக துணையோடு அதிமுக பொதுக்குழுவை பன்னீர்செல்வம் சீர்குலைக்க முயன்றார். ராணுவ கட்டுக்கோப்போடு நடத்தி காட்டினோம். தொண்டர்களை சந்திக்கும் போது பன்னீர்செல்வத்திற்கு உண்மை புரியும். அவர் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் திமுக பொய் பேசி வருகிறது. தமிழகத்தை திமுக அரசு போதைப்பொருள் மாநிலமாக்கிவிட்டது. போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதன் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் தவறிவிட்டது. போதைப்பொருளை தி.மு.க.,வினர் விற்பனை செய்கின்றனர். காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது.

எது நல்லது கெட்டது என தெரியாமல் முதல்வர் ஆட்சி செய்கிறார். ஆன்லைன் ரம்மியை தடுக்க வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்துள்ளன. ஆனால், துட்டு வந்து கொண்டுள்ளதால், அதனை நிறுத்த மாட்டார்கள். ஆன்லைன் ரம்மியை தடுக்க எதற்கு கருத்து கேட்க வேண்டும். ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். என்ன நடந்தது என தெரியவில்லை. இனியாவது தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-செப்-202211:59:37 IST Report Abuse
தமிழ் இவனெல்லாம் ஒரு முன்னாள் முதல்வர்.
Rate this:
raja - Cotonou,பெனின்
09-செப்-202214:19:33 IST Report Abuse
rajaமக்கள் பேசுகிறார்களே கொத்தடிமையே........
Rate this:
raja - Cotonou,பெனின்
09-செப்-202216:08:16 IST Report Abuse
rajaஇப்போது தமிழகத்தை சுரண்டும் விடியலைவிட உயர்ந்தவர் என்று .......
Rate this:
Cancel
09-செப்-202206:44:56 IST Report Abuse
பேசும் தமிழன் அவர்கள் பேசுவது எல்லாமே.... பொய் தானே
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
08-செப்-202220:35:15 IST Report Abuse
Ramesh Sargam பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தவர்கள் பொய்யை மட்டுமே பேசுவார்கள். இதில் என்ன ஆச்சரியம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X