சிகரெட் லைட்டர்களுக்கு தடை : மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்| Dinamalar

சிகரெட் லைட்டர்களுக்கு தடை : மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : செப் 08, 2022 | Added : செப் 08, 2022 | கருத்துகள் (17) | |
சென்னை :பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தீப்பெட்டி தொழிற்சாலை மூலம் ரூ.400 கோடி அளவிற்கு அந்நியசெலாவணி ஈட்டப்படுகிறது. கொரோனா மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பால் இத்தொழிலில்

சென்னை :பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



latest tamil news



மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தீப்பெட்டி தொழிற்சாலை மூலம் ரூ.400 கோடி அளவிற்கு அந்நியசெலாவணி ஈட்டப்படுகிறது. கொரோனா மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டரால் இத்தொழில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஉள்ளது. மேலும் பயன்படுத்திய பின்னர் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் லைட்டரால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு கடித்ததில் தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X