சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 08, 2022 | |
Advertisement
பன்னீர்செல்வம் அணியின், செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜ் அறிக்கை:தமிழகத்தில், பா.ஜ.,வை காலுான்ற விடக்கூடாது என்ற தி.மு.க.,வின் திரைமறைவு திட்டத்தை நிறைவேற்றவும், 2026 சட்டசபை தேர்தலில், உதயநிதிக்கு பட்டாபிஷேகம் சூட்டவும், பழனிசாமியை வைத்து தி.மு.க., கணக்கு போடுகிறது. இதற்கு கைமாறாக கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தையும், பழனிசாமி மற்றும் அவரது ஊழல் பங்காளிகளையும் காப்பாற்றி,


பேச்சு, பேட்டி, அறிக்கை

பன்னீர்செல்வம் அணியின், செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜ் அறிக்கை:தமிழகத்தில், பா.ஜ.,வை காலுான்ற விடக்கூடாது என்ற தி.மு.க.,வின் திரைமறைவு திட்டத்தை நிறைவேற்றவும், 2026 சட்டசபை தேர்தலில், உதயநிதிக்கு பட்டாபிஷேகம் சூட்டவும், பழனிசாமியை வைத்து தி.மு.க., கணக்கு போடுகிறது. இதற்கு கைமாறாக கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தையும், பழனிசாமி மற்றும் அவரது ஊழல் பங்காளிகளையும் காப்பாற்றி, சட்ட பாதுகாப்பை வழங்க, தி.மு.க.,விடம் இருந்து உத்தரவாதம் தரப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவரா இருக்கணும்'னு சொல்லுவாங்க... அ.தி.மு.க., அணியின் ரெண்டு தரப்பும், தி.மு.க.,வை மாறி மாறி குற்றம் சொல்றதை பார்த்தா, அவங்க ஒன்றும் அப்பழுக்கு அற்றவர்களா இல்லை என்பது தெளிவா தெரியுது!

தமிழக மணல் லாரி உரிமையாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் பேட்டி: கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், 'இ - வே பில்' போடப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கையால் எழுதும் ரசீது மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், 10 மடங்கு கனிம வளங்கள், வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய், அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு இதெல்லாம் தெரியுமா?


தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'நியூட்டன் மட்டுமல்ல, நீச்சல் கற்றுத் தந்த தலித் நண்பனும் என் ஆசான் தான்' என, வைரமுத்து கூறியுள்ளார். இது, அப்பட்டமான ஜாதிய தீண்டாமையின் வெளிப்பாடு. சமூக நீதி பேசும் திராவிட மாடல்களும், கம்யூனிஸ்ட்களும் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? திருமாவளவனின் அமைதிக்கு காரணம் என்ன?வைரமுத்து கருத்தில், ஜாதிய தீண்டாமை இருப்பதாக தெரியவில்லையே... அவரை ஆசான் என பெருமையாகத் தானே கூறியுள்ளார்!

பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேட்டி: காங்., கட்சிக்கு உயிரூட்ட செய்யும் முயற்சியே, ராகுல் நடைபயண திட்டம். காங்., கட்சி மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். இவர் நடந்தாலும், ஓடினாலும் காங்கிரசை காப்பாற்ற முடியாது. இந்த நடைபயணம் ராகுல் உடல்நலனுக்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம். ஒருபோதும் நாட்டு நலனுக்கோ, காங்., கட்சிக்கோ நல்லதாக இருக்காது.அவருக்கு நாட்டை சுற்றிப் பார்க்கணும்னு தோணியிருக்கலாம்... நடந்துட்டு போறார்னு விடுங்க!

தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் பேட்டி: ஊராட்சி செயலர்களுக்கு பணிச்சுமை அதிகம். ஒருவர், 20க்கும் மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டியுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 12 முதல் 14 வரை, மூன்று நாட்கள் விடுப்பு எடுத்து, அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்துள்ளோம்.அரசின் கவனத்தை ஈர்க்க ஆயிரம் வழிகள் இருக்கையில், விடுப்பு போட்டு வீட்டில் துாங்குவது சரியா?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X