அடிப்படை வசதிகளுக்கு அல்லல்படும் கீழச்சேரி ஊராட்சி

Added : செப் 08, 2022 | |
Advertisement
கீழச்சேரி:கீழச்சேரி ஊராட்சியில், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவு நீர், சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது கீழச்சேரி ஊராட்சி. இங்கு கீழச்சேரி, கோவிந்தமேடு, பள்ள காலனி, மேட்டு காலனி, அருந்ததிபுரம், செய்யம்பாக்கம் என, ஆறு குக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஒன்பது வார்டுகளும், 30க்கும் மேற்பட்ட
அடிப்படை வசதிகளுக்கு அல்லல்படும் கீழச்சேரி ஊராட்சி

கீழச்சேரி:கீழச்சேரி ஊராட்சியில், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவு நீர், சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது கீழச்சேரி ஊராட்சி. இங்கு கீழச்சேரி, கோவிந்தமேடு, பள்ள காலனி, மேட்டு காலனி, அருந்ததிபுரம், செய்யம்பாக்கம் என, ஆறு குக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஒன்பது வார்டுகளும், 30க்கும் மேற்பட்ட தெருக்களில் 850 வீடுகளில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்கு சாலை, குடிநீர், கழிவு நீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், இரவு, பகல் பாராது எந்நேரமும் தெருவிளக்குகள் எரிந்த நிலையில் உள்ளன.இந்த ஊராட்சியில் உள்ள காலனி பகுதியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் சேதமடைந்து எட்டாண்டாகியும் சீரமைக்கப்படாததால் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.குடியிருப்பு பகுதிகளில், கற்கள் பெயர்ந்த சாலையால் வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் புழுதியால் பொதுமக்களும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.மேலும், குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால், பள்ள காலனி பகுதியில் சிமென்ட் சாலையே கழிவு நீர் கால்வாயாக மாறியுள்ளதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், கீழச்சேரி ஊராட்சியில் ஆய்வு செய்து குடிநீர், சாலை, கழிவு நீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X