கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு

Added : செப் 08, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை பகுதிகளில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.டி.கோட்டாம்பட்டி வரதராஜப்பெருமாள் கோவிலில், யோக நரசிம்மருக்கு ஒன்பது வகையான அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை பகுதிகளில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.டி.கோட்டாம்பட்டி வரதராஜப்பெருமாள் கோவிலில், யோக நரசிம்மருக்கு ஒன்பது வகையான அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், பிரதோஷத்தையொட்டி சக்தி உடனுறை மலையாண்டீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ஈஸ்வரன் அருள்பாலித்தார்.கோவில்பாளையம் காளியண்ணன்புதுார் மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவில், மாகாளியம்மன் கோவில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


வால்பாறை


வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று மாலை ஆவணி, இரண்டாவது பிரதோஷ பூஜை நடந்தது.மாலை, 5:00 மணிக்கு நடந்த பிரதோஷ பூஜையில், பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிேஷக பூஜை நடந்தது.தொடர்ந்து மாலை, 6:15 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. பின் சிவபெருமான், தேவியருடன் தேரில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


உடுமலை


உடுமலை ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேசுவரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நந்திபகவானுக்கு மஞ்சள் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இதே போல், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், கொழுமம் காசிவிஸ்வநாதர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன.

- நமது நிருபர் குழு-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X