உடற்கல்வி ஆசிரியருக்கு விருது; மாநில அரசு அறிவிப்பு | Dinamalar

உடற்கல்வி ஆசிரியருக்கு விருது; மாநில அரசு அறிவிப்பு

Added : செப் 08, 2022 | |
ஆனைமலை : ஆனைமலை அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு, தமிழக அரசின் மாநில விளையாட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனைமலை அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் முரளி, 44.இவர், சிறப்பான முறையில் கிராமப்புற மாணவர்களுக்கு வாலிபால் பயிற்சியளித்து, தேசிய மற்றும் மாநில வாலிபால், பீச் வாலிபால் போட்டிகளில்
உடற்கல்வி ஆசிரியருக்கு விருது; மாநில அரசு அறிவிப்பு

ஆனைமலை : ஆனைமலை அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு, தமிழக அரசின் மாநில விளையாட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் முரளி, 44.இவர், சிறப்பான முறையில் கிராமப்புற மாணவர்களுக்கு வாலிபால் பயிற்சியளித்து, தேசிய மற்றும் மாநில வாலிபால், பீச் வாலிபால் போட்டிகளில் பங்கேற்க வைத்து, அவர்களை சாதனை படைக்க துாண்டுகோலாக உள்ளார்.



மேலும், பள்ளி முடித்து வெளியில் செல்லும் மாணவர்களை கல்லுாரியில் சேர்ப்பது மற்றும் விளையாட்டு பிரிவில் மாணவர்களை அரசுப்பணிகளில் சேர்த்துவதற்கு உதவி வருகிறார்.இந்நிலையில், தமிழக அரசு நேற்று முன்தினம், மாணவர்களின் வாழ்க்கையை உயர்த்திவரும், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு, மாநில விளையாட்டு விருது அறிவித்தது.



இதில், 2018 - 2019ம் ஆண்டுக்கான சிறந்த உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர் வகையில், வாலிபால் மற்றும் பீச் வாலிபால் பிரிவில் இவர் தேர்வாகியுள்ளார்.விருது பெற்றது குறித்து, உடற்கல்வி ஆசிரியர் முரளி கூறியதாவது:



தமிழக அரசின் மாநில விளையாட்டு விருது கிடைத்துள்ளது பெருமகிழ்ச்சியாக உள்ளது. 17 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றி வருகிறேன். இதுவரை, ஆறு முறை தமிழக அணிக்கான பயிற்சியாளராக இருந்துள்ளேன். இப்பள்ளியில் படித்த மாணவர்கள், மூன்று முறை சர்வதேச அளவிலான பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.



பள்ளி கல்வித்துறை நடத்தும் வாலிபால், பீச் வாலிபால் போட்டியில், 22 முறை மாநில அளவிலும்; 25 முறை தேசிய விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் விளையாடி வென்றுள்ளனர்.9க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தபால் துறை, ராணுவம், சுங்கத்துறை, வரித்துறை என, பல அரசு துறைகளில் விளையாட்டுப்பிரிவில் வேலை பெற்றுள்ளனர். இவ்வாறு, தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X