முகூர்த்த நாளில் முடங்கிய போக்குவரத்து; பல்லடத்தில் தொடரும் அவலம்

Added : செப் 08, 2022 | |
Advertisement
பல்லடம் : முகூர்த்த நாள் என்பதால், பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று போக்குவரத்து முடங்கியது.பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அண்ணா நகர் முதல் பனப்பாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்; கிடப்பில் உள்ள ஆறு வழிச்சாலை, மற்றும் ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.பல ஆண்டு
முகூர்த்த நாளில் முடங்கிய போக்குவரத்து; பல்லடத்தில் தொடரும் அவலம்

பல்லடம் : முகூர்த்த நாள் என்பதால், பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று போக்குவரத்து முடங்கியது.பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அண்ணா நகர் முதல் பனப்பாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்; கிடப்பில் உள்ள ஆறு வழிச்சாலை, மற்றும் ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பல ஆண்டு கோரிக்கைக்கு பின், பல்லடம் அண்ணா நகர் முதல் காரணம் பேட்டை வரை உள்ள, 10 கி.மீ., துாரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும், பல்லடம் நகர பகுதிக்குள் இன்னும் அவல நிலையே தொடர்ந்து வருகிறது.நேற்றும், முன்தினமும் முகூர்த்த நாள் என்பதால், பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து முடங்கியது. அண்ணா நகர் முதல் பனப்பாளையம் வரை வாகனங்கள் ரோட்டில் அணிவகுத்து ஊர்ந்து சென்றன.

உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஒன்று, வழக்கம் போல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டது. ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட நினைத்த போதும், வாகன ஓட்டிகளால் துளியும் நகர இயலவில்லை. அந்த அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உயிரை காக்க ஆம்புலன்ஸ்கள் அதிவேகத்தில் சென்றபோதும், பல்லடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிக்க இயலாமல் போகிறது.எனவே, ரோடு விரிவாக்க பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பு.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X