சாலையில் சேறும்...சகதியும் சகஜமாச்சு! தடுமாறும் வாகனங்கள்

Added : செப் 08, 2022 | |
Advertisement
திருப்பூர், அம்மாபாளையம் சோதனைச்சாவடி அருகில் இருந்து, பூண்டி நல்லாறு பாலம் வரை வலதுபுற சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இரவில் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- அன்பரசு, அம்மாபாளையம்.திருப்பூர், கே.செட்டிபாளையத்தில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.-மோகனா, அய்யம்பாளையம்.சிக்னல்
சாலையில் சேறும்...சகதியும் சகஜமாச்சு! தடுமாறும் வாகனங்கள்

திருப்பூர், அம்மாபாளையம் சோதனைச்சாவடி அருகில் இருந்து, பூண்டி நல்லாறு பாலம் வரை வலதுபுற சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இரவில் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- அன்பரசு, அம்மாபாளையம்.

திருப்பூர், கே.செட்டிபாளையத்தில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.-மோகனா, அய்யம்பாளையம்.

சிக்னல் பழுது
திருப்பூர், சிறுபூலுவப்பட்டி நால்ரோடு சந்திப்பில் சிக்னல் பழுதாகியுள்ளது. போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்கின்றனர்.-கவிப்பிரியா, சிறுபூலுவப்பட்டி.

இருக்கை சேதம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் வரிவசூல் மையத்தில், மக்கள் அமரக்கூடிய இருக்கை சேதமாகியுள்ளது. சரிசெய்ய முன்வராததால், இருக்கை இருந்தும் பயன்படுத்த முடியவில்லை.-ரங்கராஜ், திருப்பூர்.

தெருநாய் தொல்லை
திருப்பூர், அனுப்பர்பாளையம் மெயின் ரோட்டில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகிறது. வாகனங்களில் செல்வோரை துரத்துவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.-தெய்வராஜ், அனுப்பர்பாளையம்.

கால்வாய் கட்டுங்க...
திருப்பூர், 47 வது வார்டு, விஜயாபுரம், ஆகாஷ்நகரில் சாக்கடை கால்வாய் வசதியில்லை. கழிவுநீர் வீடுகள் முன் தேங்கி நிற்பதால், நடந்து செல்ல கூட முடிவதில்லை. சாக்கடை கால்வாய் கட்டித்தர வேண்டும்.-மதன், ஆகாஷ்நகர்.

விளக்கு எரிவதில்லை
திருப்பூர், காலேஜ் ரோடு, சிக்கண்ணா கல்லுாரி முன் தெருவிளக்கு எரிவதில்லை. பஸ் ஸ்டாப் உள்ள இடம் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. புதிய விளக்கு பொருத்த வேண்டும்.-நாகராஜன், கொங்கணகிரி.

மரக்கிளை அகற்றலாமே
திருப்பூர், லட்சுமி நகர் எக்ஸ்டென்சன், ஈஸ்வரன் கோவில் முன், மாநகராட்சி பகுதிகள் குறித்த அறிவிப்பு பலகையை மறைக்கும் அளவு மரக்கிளை வளர்ந்துள்ளது. அவற்றை அகற்ற வேண்டும்.-சங்கர்சதீஷ், லட்சுமி நகர்.

குப்பை அள்ளுங்க!
பல்லடம், நொச்சிபாளையம் பிரிவு, பி.ஏ.பி., கிளை வாய்க்காலில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி, காற்றில் பறக்கிறது. குப்பையை அள்ளிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-திவ்யா, நொச்சிபாளையம் பிரிவு.

கழிவுநீர் தேக்கம்
திருப்பூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் வீதியில் இருந்து புஷ்பா பஸ் ஸ்டாப் செல்லும் சுரங்கபாலத்தில் கழிவுநீர் தேக்கத்தால், சேறும், சகதியுமாக உள்ளது. பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்.-மாரிமுத்து, காதர்பேட்டை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X