சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

தினமும் 8 மணி நேரம்படித்தேன்!

Added : செப் 08, 2022 | |
Advertisement
'குரூப் - ௧' தேர்வில், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, டி.எஸ்.பி., பணிக்கு தேர்வாகி இருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சி, கீழ செட்டியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள், பவானியா: உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்; ரெண்டு அக்கா, ஒரு தங்கச்சி. நான் மூணாவது பொண்ணு. ஏ.மாத்துார்ல இருக்கிற அரசு பள்ளியில், பிளஸ் ௨ படித்தேன். அடுத்து படிக்கிறதுக்கு,
சொல்கிறார்கள்



'குரூப் - ௧' தேர்வில், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, டி.எஸ்.பி., பணிக்கு தேர்வாகி இருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சி, கீழ செட்டியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள், பவானியா: உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்; ரெண்டு அக்கா, ஒரு தங்கச்சி. நான் மூணாவது பொண்ணு. ஏ.மாத்துார்ல இருக்கிற அரசு பள்ளியில், பிளஸ் ௨ படித்தேன்.

அடுத்து படிக்கிறதுக்கு, புதுக்கோட்டைக்கு தான் போகணும். ஊரில் இருந்து, 3 கி.மீ., துாரம் இருக்கும் செட்டியாப்பட்டி விலக்கு பகுதி வரை சைக்கிளில் சென்று, அங்கிருந்து பஸ்சில் கல்லுாரிக்கு போயிட்டு வருவேன். அப்பாவின் டீக்கடைக்கு சென்று, முடிந்த உதவிகளை செய்வேன். அப்போது, டீக்கடையில் இருக்கும் செய்தித்தாளை படிக்க ஆரம்பித்தேன். அதில் வரும் தன்னம்பிக்கை கட்டுரைகள் ரொம்ப பிடிக்கும்; அதை படித்த எனக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகும் ஆசை வந்தது.பத்திரிகையில், 'குரூப் - ௧' தேர்வு குறித்த அறிவிப்பு வந்ததும் விண்ணப்பித்தேன். தேர்வை எப்படி எழுதுறதுன்னு சிலர் கிட்ட வழிகாட்டல் கேட்டேன். 'தமிழ் மீடியத்தில் படிச்சிட்டு, இதெல்லாம் ரொம்ப கஷ்டம்'ன்னு பயமுறுத்தி விட்டுட்டாங்க. ஆனாலும், நம்பிக்கையோட படிச்சு, முதல் நிலை தேர்வு எழுதி, மெயின் தேர்வுக்கு தகுதியானேன். சரளமாக படிப்பேன்; எழுதுவேன். ஆனா, 'பிரசன்டேஷன்' பண்ணத் தெரியலை. கரன்ட் அப்டேட்ஸ் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் உள்ளிட்ட, சில புத்தகங்கள் தேவைப்பட்டது; அதற்கு சிலர் உதவினர். சென்னை, மனித நேய ஐ.ஏ.எஸ்., அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுத்தேன். எழுத்து தேர்வு, நேர் காணலை கையாள்வதற்கான அடிப்படை விஷயங்களை, அங்க தான் கத்துக்கிட்டேன். பிரசன்டேஷன் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கிட்டேன். குடும்ப வறுமை காரணமாக, சின்ன சின்ன விவசாய வேலைகளையும் பார்ப்பேன். வேலைக்கு போனாலும் பகல், இரவுன்னு தினமும் எட்டு மணி நேரம் வரை படிப்பேன். தேர்வுக்கு முன்னாடி, ஒரு மாதம் மட்டும், கடின உழைப்பை கொடுத்தேன்; அது, ரொம்பவே கைகொடுத்துச்சு.தமிழ் வழியில் படித்த நான், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான சிறப்பு பிரிவில் தான், இந்தப் பணிக்கு தகுதி பெற்றிருக்கேன். தமிழ் மீடியத்தில் படிக்கிறவங்களும், 'குரூப் - ௧' தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் நிச்சயமாக வெற்றி பெற முடியும். எதுவும் சிரமப்படாமல் கிடைக்காது; கடின உழைப்பு போடணும். எந்த மொழியில் எழுதுகிறோம்ங்கிறது முக்கியமில்லை; தெளிவாக பிரஷன்டேஷன் கொடுக்கிறது தான் முக்கியம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X