கழிவு நீர் கால்வாய் மூடல்

Added : செப் 08, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம், மாநகராட்சி தொடக்கப் பள்ளி அருகில், கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மீது மூடப்பட்டுள்ள சிமென்ட் பலகை நான்கு இடங்களில் திறந்த நிலையில் இருந்தது.பள்ளி சுற்றுச்சுவரையொட்டி, கழிவு நீர் கால்வாய் திறந்து கிடப்பதால், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் கவனக்குறைவாக கால்வாய்க்குள் தவறி விழுந்து
கழிவு நீர் கால்வாய் மூடல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம், மாநகராட்சி தொடக்கப் பள்ளி அருகில், கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் மீது மூடப்பட்டுள்ள சிமென்ட் பலகை நான்கு இடங்களில் திறந்த நிலையில் இருந்தது.பள்ளி சுற்றுச்சுவரையொட்டி, கழிவு நீர் கால்வாய் திறந்து கிடப்பதால், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் கவனக்குறைவாக கால்வாய்க்குள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.அதே போல் பள்ளி அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, புதுப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து மாநகராட்சி தொடக்கப் பள்ளி வரை நான்கு இடங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், திறந்து கிடக்கும் கால்வாய் மீது சிமென்ட் பலகை போட்டு மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், புதுப்பாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி அருகில், நான்கு இடங்களில் திறந்து கிடந்த கால்வாய் மீது, சிமென்ட் பலகை கொண்டு மூடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X