அடையாற்றில் மெட்ரோ மேம்பால தூண் கட்டுமான பணி பருவ மழை துவங்குவதற்கு முன்பே முடிக்க திட்டம்

Added : செப் 08, 2022 | |
Advertisement
சென்னை, ;மவுன்ட் - பூந்தமல்லி சாலையில், நந்தம்பாக்கம் அருகே அடையாற்றில் மெட்ரோ ரயில் மேம்பாலம் அமைக்க எட்டு துாண்கள் அமைக்கும் பணிகளை, பருவமழை துவங்குவதற்கு முன்பே முடிக்க திட்டமிட்டுள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.சென்னையில் இரண்டாவது கட்டத்தில், சோழிங்கநல்லுார் - மாதவரம் தடத்தில் மொத்தம் 47 கி.மீ., துாரத்திற்கு அமைகிறது. இது குறித்து, சென்னை
அடையாற்றில் மெட்ரோ மேம்பால தூண் கட்டுமான பணி   பருவ மழை துவங்குவதற்கு முன்பே முடிக்க திட்டம்


சென்னை, ;மவுன்ட் - பூந்தமல்லி சாலையில், நந்தம்பாக்கம் அருகே அடையாற்றில் மெட்ரோ ரயில் மேம்பாலம் அமைக்க எட்டு துாண்கள் அமைக்கும் பணிகளை, பருவமழை துவங்குவதற்கு முன்பே முடிக்க திட்டமிட்டுள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இரண்டாவது கட்டத்தில், சோழிங்கநல்லுார் - மாதவரம் தடத்தில் மொத்தம் 47 கி.மீ., துாரத்திற்கு அமைகிறது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பெரும்பாலான இடங்களில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மாதவரம் -- சோழிங்கநல்லுார் தடத்திலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மவுன்ட் - பூந்தமல்லி சாலையில் நந்தம்பாக்கம் அருகே அடையாற்றை கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக, மொத்தம் எட்டு துாண்கள் அமைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, நான்கு துாண்களுக்கான அடித்தள பணிகளை நிறைவு செய்து, அடுத்தகட்ட பணிகளை துவங்கி உள்ளோம்.எஞ்சியுள்ள மற்ற பணிகளையும் வரும் பருவமழை துவங்குவதற்கு முன்பே முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதுபோல், மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்களில் மழைநீர் தடையின்றி செல்லவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X