வத்திராயிருப்பு கோவில் தெப்பத்தில் பெருமாள் சிலை கண்டெடுப்பு

Added : செப் 08, 2022 | |
Advertisement
வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா மாவூற்று உதயகிரிநாதர் கோவில் தெப்பக்குளம் புனரமைப்பின்போது, 1 அடி உயர, பொன்னிறத்தில் இருந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.இந்த தெப்பக்குளம், அரசு சார்பில் புனரமைக்கப்படுகிறது. தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று அந்த பணி நடைபெற்ற போது 1 அடி உயரத்தில் பொன்னிறத்தில் ஒரு பெருமாள் சிலை
வத்திராயிருப்பு கோவில் தெப்பத்தில் பெருமாள் சிலை கண்டெடுப்பு

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா மாவூற்று உதயகிரிநாதர் கோவில் தெப்பக்குளம் புனரமைப்பின்போது, 1 அடி உயர, பொன்னிறத்தில் இருந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

இந்த தெப்பக்குளம், அரசு சார்பில் புனரமைக்கப்படுகிறது. தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று அந்த பணி நடைபெற்ற போது 1 அடி உயரத்தில் பொன்னிறத்தில் ஒரு பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

வத்திராயிருப்பு தாசில்தார் உமா மகேஸ்வரி, போலீசார், அறநிலைத்துறையினர் அந்த சிலையை பார்வையிட்டனர்.அந்த சிலை பொன்னிறத்தில் இருந்ததால், ஐம்பொன் சிலையா அல்லது வெண்கலமா என்பது குறித்து விசாரணை நடத்தினர். பின், மீட்கப்பட்ட சிலை வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.விசாரணைக்கு பின், விருதுநகர் அருங்காட்சியகத்திற்கு அந்த சிலை கொண்டு செல்லப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X