சாலையோரத்தில் குப்பை குவியல் மாமல்லன் நகரில் சுகாதார சீர்கேடு| Dinamalar

சாலையோரத்தில் குப்பை குவியல் மாமல்லன் நகரில் சுகாதார சீர்கேடு

Added : செப் 08, 2022 | |
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாமல்லன் நகரில், அப்பகுதிவாசிகளின், வீடுகளில் இருந்து சேகரமாகும் குப்பை கொட்டுவதற்காக தொட்டி வைக்கப்பட்டு உள்ளது.குப்பை தொட்டியில் உள்ள குப்பையை மட்டும் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.குப்பை தொட்டி நிரம்பி வழிந்து சாலையில் குவியலாக கிடக்கும் குப்பையை அகற்றுவதில்லை.நாள் கணக்கில்
சாலையோரத்தில் குப்பை குவியல் மாமல்லன் நகரில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாமல்லன் நகரில், அப்பகுதிவாசிகளின், வீடுகளில் இருந்து சேகரமாகும் குப்பை கொட்டுவதற்காக தொட்டி வைக்கப்பட்டு உள்ளது.

குப்பை தொட்டியில் உள்ள குப்பையை மட்டும் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.குப்பை தொட்டி நிரம்பி வழிந்து சாலையில் குவியலாக கிடக்கும் குப்பையை அகற்றுவதில்லை.நாள் கணக்கில் குவிந்து கிடக்கும் குப்பையால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.


மேலும், தெரு நாய்கள் குப்பையை கிளறுவதால், காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.எனவே, குப்பையை முறையாக அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாமல்லன் நகர், ஒட்டக்கூத்தர் தெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X