பஸ் ஸ்டாண்ட் மேற்கூரையில் சோலார் பேனல் பதிப்பு

Added : செப் 08, 2022 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர் -காமராஜ் ரோடு பஸ் ஸ்டாண்ட் மேற்கூரையில் சோலார் மின் உற்பத்தி பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், 50 கே.வி., மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்ட் காமராஜ் ரோட்டில் உள்ளது. இதில் ஏறத்தாழ 40 கோடி ரூபாய் செலவில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது.பஸ் ஸ்டாண்டில், 45
பஸ் ஸ்டாண்ட் மேற்கூரையில் சோலார் பேனல் பதிப்பு

திருப்பூர் : திருப்பூர் -காமராஜ் ரோடு பஸ் ஸ்டாண்ட் மேற்கூரையில் சோலார் மின் உற்பத்தி பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், 50 கே.வி., மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்ட் காமராஜ் ரோட்டில் உள்ளது. இதில் ஏறத்தாழ 40 கோடி ரூபாய் செலவில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது.பஸ் ஸ்டாண்டில், 45 பஸ்கள் நிற்கும் வசதி, தரை தளத்தில் 84 கடைகள், முதல் தளத்தில் மூன்று உணவு விடுதிகள் அமைந்துள்ளன. இதுதவிர நிர்வாக அலுவலகம், போக்குவரத்து கழக நேரக்காப்பாளர் அலுவலகங்களும் உள்ளன.நான்கு பகுதிகளில் பொதுக்கழிப்பிடம், எலக்ட்ரிக் வாகனம் சார்ஜிங் ஸ்டேஷன், கண்காணிப்பு கேமரா, பஸ் புறப்பாடு அறிவிப்பு வசதி, பயணியர் இருக்கை வசதி, தாய்மார்கள் பாலுாட்டும் அறை உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்றுள்ளன.

கடைகளுக்கான ஏலம் முடிந்துள்ளன. வளாகம் முழுவதும் கட்டுமானப் பணி முற்றிலும் நிறைவடைந்து, பெயின்டிங் மற்றும் நகாசு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. பஸ்கள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதியில் இரு பெரிய அளவிலான 'ஆர்ச்' அமைக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.'ஆர்ச்' அமையும் இடத்தில் தற்போது தற்காலிகமாக பஸ்கள் நின்று திரும்புவதால் இப்பணி சற்று தாமதமாகி வருகிறது. மேலும், கடைகள் மற்றும் வளாகத்துக்கு மின் இணைப்பு பெறுவதில் நிலவும் நடைமுறைச் சிக்கல் காரணமாக, இழுபறியாக உள்ளது.



சோலார் தகடுபதிக்கும் பணிகள்


பஸ் ஸ்டாண்ட் பிரதான கட்டடத்தின் மேற்கூரையில் சோலார் மின் உற்பத்தி செய்ய தகடுகள் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் 50 கே.வி., மின்சாரம் பெறப்படும். அதனை மின் வாரியத்துக்கு நேரடியாக வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.வாரியத்துக்கு வழங்கும் மின் அளவுக்கு ஏற்ப மாநகராட்சிக்கு மின் கட்டணத்தில் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.கட்டுமான பணிகள் அதிகபட்சமாக இன்னும் ஒரு மாத காலத்துக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், விரைவில் பணிகள் முடிந்து இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.பஸ் ஸ்டாண்ட் மேற்கூரையில் சோலார்மின் உற்பத்தி செய்ய, தகடுகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால், 50 கே.வி., மின்சாரம் பெறப்படும். அதனை மின் வாரியத்துக்கு நேரடியாக வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X