குன்னூரில் ஆதிவாசி தற்கொலை; உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

Added : செப் 08, 2022 | |
Advertisement
குன்னுார் : குன்னுாரில் பழங்குடி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குன்னுார் ஜோகி கோம்பையை சேர்ந்தவர் பொன்னுசாமி,45. இவர் மீதான தந்தம் கடத்தல் வழக்கு, 2015ல் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், வனத்துறையின் சந்தன மரம் வெட்டிய வழக்கும் நடந்து வருகிறது.இந்நிலையில், செங்கல்புதுார்
குன்னூரில் ஆதிவாசி தற்கொலை; உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

குன்னுார் : குன்னுாரில் பழங்குடி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குன்னுார் ஜோகி கோம்பையை சேர்ந்தவர் பொன்னுசாமி,45. இவர் மீதான தந்தம் கடத்தல் வழக்கு, 2015ல் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், வனத்துறையின் சந்தன மரம் வெட்டிய வழக்கும் நடந்து வருகிறது.இந்நிலையில், செங்கல்புதுார் பழங்குடியினர் கிராமத்தில் மனைவியின் வீட்டில், பொன்னுசாமி இருந்தபோது, 'சி.பி.ஐ.' எனக்கூறி, 3 பேர் வந்து, தனியாக அழைத்து விசாரணை செய்து சென்றுள்ளனர்.

நேற்று காலை பொன்னுசாமி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். குன்னுார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உடலை வாங்க மறுத்து பழங்குடியினர், திடீரென, 4:00 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கூடுதல் கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, ஏ.டி.எஸ்.பி., மோகன் நிவாஸ் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.

அதில்,' பொன்னுசாமியின் மனைவிக்கு அரசு பணி; பழங்குடியினர் மீது பொய் வழக்கு போட கூடாது,' என, பழங்குடியினர் வலியுறுத்தினர்.கூடுதல் கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி கூறுகையில்,''உரிய விசாரணை நடத்தப்படும். கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார். தொடர்ந்து, உடலை வாங்க ஒப்புகொண்டு மக்கள் கலைந்து சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X