அரசு பேருந்து ஓட்டுனர் மீது தாக்கு போதை ஆட்டோ டிரைவர் கைது

Added : செப் 08, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:அரசு பேருந்து ஓட்டுனரை இரும்பு கம்பி யால் தாக்கிய ஆட்டோ ஓட்டுனரை கைது செய்ய வலியுறுத்தி, சக ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தினர்.காஞ்சிபுரத்தில் நேற்று அதிகாலை புறப்பட்ட அரசு பேருந்து, வேலுார் நோக்கி சென்று கொண்டிருந்தது.ஓட்டுனர் சுரேஷ்பாபு, 35, நிலையத்தில் இருந்து பேருந்தை சிறிது துாரம் ஓட்டி வந்தபோது, எதிரில் வந்த ஆட்டோ ஓட்டுனர், வாகனத்தை
அரசு பேருந்து ஓட்டுனர் மீது தாக்கு போதை ஆட்டோ டிரைவர் கைது

காஞ்சிபுரம்:அரசு பேருந்து ஓட்டுனரை இரும்பு கம்பி யால் தாக்கிய ஆட்டோ ஓட்டுனரை கைது செய்ய வலியுறுத்தி, சக ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தினர்.
காஞ்சிபுரத்தில் நேற்று அதிகாலை புறப்பட்ட அரசு பேருந்து, வேலுார் நோக்கி சென்று கொண்டிருந்தது.ஓட்டுனர் சுரேஷ்பாபு, 35, நிலையத்தில் இருந்து பேருந்தை சிறிது துாரம் ஓட்டி வந்தபோது, எதிரில் வந்த ஆட்டோ ஓட்டுனர், வாகனத்தை நிறுத்தி பயணியரை இறக்கினார்.
இதை பார்த்த அரசு பேருந்து ஓட்டுனர், 'ஆட்டோவை ஓரமாக நிறுத்தி பயணியரை இறக்கிவிட கூடாதா' என கேட்டார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர், வாகனத்தில் இருந்து கனமான இரும்பு கம்பியை எடுத்து வந்து, பேருந்து ஓட்டுனரை தாக்கி தப்பி சென்றார்.
காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார்.சக ஓட்டுனர் காயம்அடைந்ததை அறிந்த அரசு பேருந்து ஓட்டுனர்கள், தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி, பேருந்துகளை இயக்க மறுத்தனர்.
தகவலறிந்த எஸ்.பி., சுதாகர் மற்றும் போலீசார், ஓட்டுனர்களிடம் பேச்சு நடத்திய பின், அனைவரும் பேருந்துகளை இயக்க சென்றனர். தப்பியோடிய ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.போலீசார் விசாரணையில், காஞ்சிபுரம் ஆலடி தோப்பு தெருவைச் சேர்ந்த 'புல்லட்' தீபக், 28, என்பதும், போதையில் ஆட்டோ இயக்கியதும் தெரிந்தது. தீபக் மீது, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

அச்சத்தில் செல்லும் பயணியர்


இளைஞர்கள், போதை பழக்கத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் துறை, பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. எனினும், மாணவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், குடியிருப்புகளில் வசிப்போர் என பலரும், கஞ்சா புகைத்து குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
இதில் ஆட்டோ ஓட்டுனர்கள் போதையில் இயங்குவது, பயணியரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆட்டோவில் பயணம் செய்த பெண் ஒருவர் கூறியதாவது:வேலை முடிந்து, நேற்று முன்தினம் மாலை, வீட்டுக்கு செல்வதற்கு ஆட்டோவில் ஏறினேன். ஆட்டோவில் இரு பயணியர் இருந்தனர். ஓட்டுனர், விதிமீறி வேகமாக ஓட்டினார்.'தம்பி, தவறான வழியில் ஏன் போகிறாய்; மெதுவாக போ' என கூறினேன்.
அதற்கு அவர், 'என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது; நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றார். போதையில் இருந்ததால், அவரிடம் மேற்கொண்டு பேசாமல், என் நிறுத்தத்தில் இறங்கிவிட்டேன்.பயணியரை ஏற்றிச்செல்லும் போது அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது. போலீசார் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X