25 பெண்களிடம் சில்மிஷம்வாலிபர் 'போக்சோ'வில் கைது

Added : செப் 08, 2022 | |
Advertisement
மயிலாப்பூர், :சென்னை, கோட்டூர்புரம், சித்ரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ், 25. இவர், மயிலாப்பூர், சி.பி.ராமசாமி சாலையில், சைக்கிளில் வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.இது குறித்து அந்த மாணவியின் தந்தை, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, தனுஷை படித்தனர். விசாரணையில், சாலையில் தனியாக செல்லும்

மயிலாப்பூர், :சென்னை, கோட்டூர்புரம், சித்ரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ், 25. இவர், மயிலாப்பூர், சி.பி.ராமசாமி சாலையில், சைக்கிளில் வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இது குறித்து அந்த மாணவியின் தந்தை, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, தனுஷை படித்தனர். விசாரணையில், சாலையில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து பாலியல் தொல்லை கொடுப்பதை தனுஷ் வழக்கமாக கொண்டிருந்தது தெரிந்தது.அவர், 25-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ் தனுஷ் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து, அவர்களிடம் போலீசார் புகார் வாங்க முடிவு செய்துள்ளனர். சென்னை மாதவரம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செஞ்சி, 52. அங்கு, மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த, 9 வயது சிறுமி, நேற்று முன் தினம் அவரது கடைக்கு இட்லி மாவு வாங்க சென்றார்.அப்போது, செஞ்சி, சிறுமியை கடைக்குள் அழைத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பெற்றோரிடம் சிறுமி கூறினார். அவர்கள், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், நேற்று காலை, செஞ்சியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X