குட்டையில் மரம் வெட்டி கடத்தல்; பொதுமக்கள் குற்றச்சாட்டு| Dinamalar

குட்டையில் மரம் வெட்டி கடத்தல்; பொதுமக்கள் குற்றச்சாட்டு

Added : செப் 08, 2022 | |
அனுப்பர்பாளையம் : திருப்பூர், பொங்குபாளையம் ஊராட்சி, பரமசிவம் பாளையத்தில் 4.50 ஏக்கர் பரப்பளவில் குட்டை ஒன்று உள்ளது. குட்டை துார்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. முட்புதர்கள் மண்டி காணப்பட்டது. இதனால் மழை நேரங்களில் மழைநீர் தேங்காத நிலை ஏற்பட்டது.குட்டையை துார்வாரி ஆழப்படுத்த வேண்டுமென விவசாய சங்கங்கள், பொது மக்கள், சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையொட்டி, குட்டையில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.முதல் கட்டமாக, 20 விவசாயிகளுக்கு ஒரு அடி ஆழத்திற்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு மண் எடுக்கப்பட்டது. இரண்டாவது கட்ட அனுமதிக்காக விவசாயிகள் காத்துள்ளனர்.வாகனம் மூலம் மண் எடுக்கும் போது, குட்டையில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதாக கூறப்பட்டது. குட்டையில் பல வகையான பறவைகள் வாழ்ந்து வருகின்றன.

மரங்களை வெட்டினால் பறவைகள் பாதிக்கப்படும். எனவே மரங்களை வெட்டாமல் குளத்தில் மண் எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி விரைவாக குட்டையை துார்வார மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X