இலவச கால்பந்து பயிற்சிஏழை சிறுவர்கள் உற்சாகம்

Added : செப் 09, 2022 | |
Advertisement
சென்னை:மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இலவசமாக நடந்து வரும் கால்பந்து பயிற்சியில், ஏழை எளிய சிறுவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர்.வியாசர்பாடியில் குடிசைவாழ் குழந்தைகள் விளையாட்டு கல்வி திறன் மேம்பாட்டு மையம் இயங்கி வருகிறது. இதன் சார்பில், அனைத்து வயது பிரிவினருக்கும், முல்லை நகரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இலவசமாக கால்பந்து பயிற்சி
இலவச கால்பந்து பயிற்சிஏழை சிறுவர்கள் உற்சாகம்

சென்னை:மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இலவசமாக நடந்து வரும் கால்பந்து பயிற்சியில், ஏழை எளிய சிறுவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர்.வியாசர்பாடியில் குடிசைவாழ் குழந்தைகள் விளையாட்டு கல்வி திறன் மேம்பாட்டு மையம் இயங்கி வருகிறது. இதன் சார்பில், அனைத்து வயது பிரிவினருக்கும், முல்லை நகரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இலவசமாக கால்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் ஏழை எளிய சிறுவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து, பயிற்சியாளர்கள் உமாபதி மற்றும் தங்கராஜ் கூறியதாவது:வியாசர்பாடியில், சிறுவர்கள் பலர் போதை உள்ளிட்ட தவறான பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தனர். இதனால், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. அவர்களை நல்வழிப்படுத்துவதற்கும், அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காகவும், குடிசை குழந்தைகள் விளையாட்டு கல்வி மேம்பாட்டு மையம் துவக்கப்பட்டது.

இதன் வாயிலாக, தற்போது, 500க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, இங்கு பயிற்சி பெற்ற நந்தகுமார், 24, என்பவர், சர்வதேச விளையாட்டு வீரராக உருவெடுத்துள்ளார். தற்போது ஒடிசா அணியின் கேப்டனாக உள்ளார்.இதேபோல் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, கல்வியிலும் சிறந்த விளங்க செய்ய, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X