முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு பதிவு

Added : செப் 09, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே முன்விரோத தகராறில் இரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த கல்லானத்தம் சேர்ந்த சுப்ரமணியன் மகன் செந்தில்,30; இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டனுக்கும் நிலத்திற்கு செல்லும் பொது பாதை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.கடந்த இரண்டு



கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே முன்விரோத தகராறில் இரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த கல்லானத்தம் சேர்ந்த சுப்ரமணியன் மகன் செந்தில்,30; இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டனுக்கும் நிலத்திற்கு செல்லும் பொது பாதை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.கடந்த இரண்டு மாதங்களுக்கு காவல் நிலையத்தில் புகார் செய்து சமாதனம் அடைந்து சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ம் தேதி பகல் 12 மணியளவில் இரு குடும்பத்தினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஒருவரையொருவர் தடி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் மணிகண்டன், அவரது மனைவி ராதா, தந்தை முருகேசன் ஆகியோர் மீது மற்றொரு தரப்பில் செந்தில், அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X