ரூ.3.50 கோடியில் நகர மன்ற அலுவலக புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

Added : செப் 09, 2022 | |
Advertisement
திருக்கோவிலுார் -திருக்கோவிலுார் நகராட்சி அலுவலகம் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.திருக்கோவிலுார் நகராட்சிக்கான புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்காக ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ள நகராட்சி அலுவலகம் எதிரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.நகராட்சி ஆணையர்
ரூ.3.50 கோடியில் நகர மன்ற அலுவலக புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா



திருக்கோவிலுார் -திருக்கோவிலுார் நகராட்சி அலுவலகம் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.திருக்கோவிலுார் நகராட்சிக்கான புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்காக ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ள நகராட்சி அலுவலகம் எதிரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.நகராட்சி ஆணையர் கீதா வரவேற்றார். நகராட்சி தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். புகழேந்தி எம்.எல்.ஏ., விழுப்புரம் மாவட்ட குழு தலைவர் ஜெயச்சந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட குழு துணை தலைவர் தங்கம், நகராட்சி துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா, நகர செயலாளர் கோபிகிருஷ்ணன் பங்கேற்றனர்.அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, நகர மன்ற அலுவலக கட்டுமான பணிக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், விஸ்வநாதன், நகராட்சி பொறியாளர் முருகன், ஒப்பந்ததாரர் புகழேந்தி, நகர மன்ற கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X