சர்வதேச ஐ.டி., நிறுவனங்கள் தடம் பதித்தன! இனி கோவையின் வளர்ச்சி விண்ணை முட்டும்

Updated : செப் 09, 2022 | Added : செப் 09, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
கோவை : சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.,) நிறுவனங்கள், கோவையில் தங்களது அலுவலகங்களை அமைத்து பணிகளை துவக்கியுள்ளன. இன்னும் சில முன்னணி நிறுவனங்கள், உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி வருவதால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா தொற்று பரவலுக்கு பின், சர்வதேச அளவில், பல்வேறு துறைகளிலும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம்
Coimbatore, IT companies, employment

கோவை : சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.,) நிறுவனங்கள், கோவையில் தங்களது அலுவலகங்களை அமைத்து பணிகளை துவக்கியுள்ளன. இன்னும் சில முன்னணி நிறுவனங்கள், உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி வருவதால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு பின், சர்வதேச அளவில், பல்வேறு துறைகளிலும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் மேம்பட்டிகிருக்கிறது. தொற்று பரவல் சமயத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி, ஏராளமான தனியார் நிறுவனங்கள், தங்களது ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்ற அங்கீகாரம் அளித்தன.

அச்சமயத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பயன்பாடு, தகவல் தொழில்நுட்ப தளத்தில் அன்றாட பயன்பாடாக பெரும்பான்மையான நிறுவனங்களில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், பலரும் தங்களது வணிகத்தை 'டிஜிட்டல்' மயமாக்கி, வீடுகளில் இருந்து பணிபுரிந்தனர்.

வீட்டுச்சூழலில் பணிபுரிவது பணியாளர்களுக்கு ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்தும் என்பதற்காக, சர்வதேச அளவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், நம் நாட்டில் உள்ள சிறு சிறு நகரங்களிலும் தங்களது அலுவலக உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அவ்வகையில் சென்னை, பெங்களூரு, மும்பை, கோல்கட்டா, டில்லி உள்ளிட்ட நகரங்களில் அலுவலகங்களை அமைத்து பணி மேற்கொண்டு வந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தற்போது இரண்டாம் கட்ட நகரங்களிலும் அலுவலகங்களை அமைத்து வருகின்றன. கோவையில் இதுவரை, 40 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அலுவலகங்கள் அமைத்து பணிகளை துவக்கி விட்டன. முன்னணி நிறுவனங்கள் சில, அலுவலகம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன.


latest tamil news

மனித ஆற்றல் பிரதானம்


இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை மண்டல தலைவர் பிரசாந்த் கூறுகையில், ''சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சென்னைக்கு அடுத்தபடியாக கோவையை நல்ல தளமாக அங்கீகரித்துள்ளன. அந்நிறுவனங்கள் இங்கு தடம் பதிக்கத் துவங்கியுள்ளன. இந்நிறுவனங்களுக்கு மனித ஆற்றல் பிரதானமானது. கோவையில், இதுவரை, 40க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் அலுவலகம் அமைத்து பணிகளை துவக்கி விட்டன. மேலும் பல தேசிய அளவிலான நிறுவனங்கள், அலுவலகம் அமைக்க உள்ளன,'' என்றார்.வளர்ச்சி வலுப்பெறும்


மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் கிஷோர் கூறுகையில், ''கோவையில் ஏராளமான இன்ஜினியரிங் கல்லுாரிகள் இருப்பதே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு வருவதற்கான காரணம். இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படித்து வெளியேறும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பை கொடுத்து பணிமேற்கொள்ள வைப்பதே அவர்களது திட்டம்.''இதனால், தொழில் வளர்ச்சி மேம்படுவதோடு, தகவல் தொழில்நுட்பம் வளரும். கோவை நகர் மற்றும் புறநகர் வர்த்தக ரீதியான வளர்ச்சி வலுப்பெறுவதோடு, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவை நல்ல வளர்ச்சியை எட்டும்,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nithiyanandham - Coimbatore,இந்தியா
09-செப்-202218:14:50 IST Report Abuse
Nithiyanandham இன்ஃபோசிஸ்,விப்ரோ,ibm, Deloitte,Tech Mahindra,Accenture, L&T infotech.
Rate this:
Cancel
Krishnan G - Chennai,இந்தியா
09-செப்-202209:06:03 IST Report Abuse
Krishnan G பார்த்து விண்ணை முட்டி அங்கு ஓட்டை போட்டுவிடப் போகிறது.. தலைப்பிற்கு நல்ல ஒரு வாசகம் கிடைக்கவில்லையா? என்றுதான் இந்த ஊடகவாதிகள் திருந்துவார்களோ
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
09-செப்-202208:51:37 IST Report Abuse
R Ravikumar திருச்சி, மதுரை பக்கமும் தொழில் நிறுவனங்கள் வந்தால் நல்லது. சென்னை நிரம்பி வழிகிறது. நாகர்கோயில், மதுரைகாரன் எல்லாம் தீபாவளிக்கு சென்னை விட்டு ஊருக்கு வருவதே இல்லை. மூன்று நாட்கள் விடுமுறைக்கு ஒன்றரை நாட்கள் பயணத்திற்க்கே போயிவிடும். கடலூர் துறைமுகம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது, கார், செல்போன் தொழிற்சாலைகள் கடலூர், தூத்துக்குடி துறைமுகம் அருகே அமைக்கலாம். உற்பத்தி செய்த பொருட்களை அனுப்ப எதுவாக இருக்கும். தரங்கம்பாடி, திருமுல்லைவாயில், நாகப்பட்டினம் தாண்டிய மீனவர்கள் இல்லாத கிராமங்கள் அருகே மீதேன் எரிவாயு எடுக்கலாம். நிறைய பகுதிகள் விவசாயம் செய்யாத, மீனவர்கள் இல்லாத, வேற்று நிலங்கள் உண்டு. ONGC/CPCL /petronet போன்ற நிறுவனங்கள் இதனை அருமையாக செய்து முடிக்கும். ஒன்று சிலிண்டர் விலை குறையும் அல்லது அரசுக்கு வருமான வரி அதிகரிக்கும். அரியலூர் , பெரம்பலூர் , தருமபுரி போன்ற ஊர்களில் சிமெண்ட் தொழிற்சாலைகள் மேலும் நிறுவப்பட வேண்டும். இது எல்லாம் கனவு நம்ம "அதிபரும், தம்பிகளும்", சபரீசம், சமூக போராளிகளும் ஒற்று கொள்வார்களா என்று தெரியவில்லை. நம்ம முதல்வர் மனம் மாறினால் அல்லது ஆட்சி மாறினால் ஏதும் நடக்க வாய்ப்பு உண்டு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X