குடற்புழு தொற்றில்லாத சமுதாயம்; கோவை மாவட்ட நிர்வாகம் சபதம்

Added : செப் 09, 2022 | |
Advertisement
கோவை : குடற்புழு தொற்றில்லாத சமுதாயம் உருவாக்க, கோவை மாவட்டத்தில் இன்று (9ம் தேதி) முதல், 16ம் தேதி வரை குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள, ஒன்று முதல், 19 வயதுடைய 10.05 லட்சம் குழந்தைகள், 20 முதல், 30 வயதுடைய, 2.59 லட்சம் பெண்கள் பயன்பெறுவர். இம்முகாம் நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது; கலெக்டர் சமீரன் தலைமை

கோவை : குடற்புழு தொற்றில்லாத சமுதாயம் உருவாக்க, கோவை மாவட்டத்தில் இன்று (9ம் தேதி) முதல், 16ம் தேதி வரை குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள, ஒன்று முதல், 19 வயதுடைய 10.05 லட்சம் குழந்தைகள், 20 முதல், 30 வயதுடைய, 2.59 லட்சம் பெண்கள் பயன்பெறுவர். இம்முகாம் நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது; கலெக்டர் சமீரன் தலைமை வகித்தார்.கோவை மாவட்டத்தில் உள்ள, 1,697 அங்கன்வாடி மையங்கள், 572 தனியார் பள்ளிகள், 1,392 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 132 கல்லுாரிகள், 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடத்த அறிவுரை வழங்கப்பட்டது.

இம்முகாம்களை மேற்பார்வை செய்ய வட்டார மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், வட்டார திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைந்த சுகாதார அலுவலர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், குடற்புழு தொற்றில்லாத சமுதாயம் உருவாக்க, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென, கலெக்டர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X