சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல்

Added : செப் 09, 2022 | |
Advertisement
கோவை : வருமான உச்சவரம்பு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதில், சிக்கல் நீடிக்கிறது.சிறுபான்மையினர் நல இயக்ககம் மூலம், அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும், சிறுபான்மையின மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கு, சிறுபான்மையினர் என்பதற்கான சான்றிதழ், வருமான

கோவை : வருமான உச்சவரம்பு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதில், சிக்கல் நீடிக்கிறது.

சிறுபான்மையினர் நல இயக்ககம் மூலம், அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும், சிறுபான்மையின மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கு, சிறுபான்மையினர் என்பதற்கான சான்றிதழ், வருமான சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியம்.

வருவாய் அடிப்படையிலான, இந்த உதவி தொகை திட்டத்திற்கு, ஆண்டு வருமான உச்சவரம்பு, ஒரு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்ததால், வருமான சான்றிதழை கட்டாயமாக்காமல், உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நடப்பாண்டு முதல் வருமான சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நகர்புறத்தில் வசிப்போர், குறைந்தபட்ச வருமான தொகைக்கு சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதால், உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.பெற்றோர் தரப்பில் கூறுகையில், 'நகர்புறத்தில், மாதம், 8,333 ரூபாய் சம்பாதித்தால் மட்டுமே, ஆண்டுக்கு ஒரு லட்சம் ஊதியம் பெறுவதாக சான்றிதழ் பெற முடியும். ஒரு நாளின் சராசரி ஊதியமே, குறைந்தபட்சம், 400 ரூபாயாக இருந்தால் மட்டுமே வாடகை, மருத்துவ செலவுகளை கவனிக்க முடியும்.

வருமான உச்சவரம்பு அடிப்படையில், தினமும், 278 ரூபாய் பெறுவோர் மட்டுமே, இத்திட்டத்தில் பயனாளிகளாக முடியும். விலைவாசி, அடிப்படை வாழ்க்கை தரம் ஆகியவற்றுக்கு ஏற்ப, ஆண்டு ஊதிய உச்சவரம்பை அதிகரிக்காமல், உதவித்தொகை வழங்குவதால், சொற்ப மாணவர்களே பயனடைவர் என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X