மீன் வியாபாரியிடம் வழிப்பறி: இரண்டு வாலிபர்கள் கைது

Added : செப் 09, 2022 | |
Advertisement
விழுப்புரம்-மீன் வியாபாரியிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த ஆயந்துார் பஸ் நிறுத்தம் அருகில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில்,
மீன் வியாபாரியிடம் வழிப்பறி: இரண்டு வாலிபர்கள் கைது



விழுப்புரம்-மீன் வியாபாரியிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த ஆயந்துார் பஸ் நிறுத்தம் அருகில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், புதுச்சேரி தவளகுப்பம் சானாம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் விஷ்ணு, 20; மற்றும் கடலுார் மாவட்டம் சிங்கிரிகுடி புதுகடையை சேர்ந்த சேகர் மகன் ஜெயமூர்த்தி, 22; என்பது தெரியவந்தது.இருவரும் கடந்த 19.12.2021ம் தேதி காங்கியனுாரை சேர்ந்த மீன் வியாபாரி சுரேஷ், என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 3,000 ரூபாயை பறித்துச் சென்றது தெரியவந்தது.இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த விஷ்ணு, ஜெயமூர்த்தியை காணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து ஒரு கத்தியை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X