மத்திய பிரதேச முதல்வரை மாற்ற பா.ஜ., திட்டம்?

Updated : செப் 09, 2022 | Added : செப் 09, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
மத்திய பிரதேச பா.ஜ.,வில் கோஷ்டி மோதல் தீவிரமடைந்துள்ளது மற்றும் ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அம்மாநில முதல்வரை மாற்ற பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நான்காவது முறையாக முதல்வராக உள்ள இவர், பா.ஜ., வின் உயர்மட்ட குழுவான பார்லிமென்ட் குழுவில் இருந்து
மத்திய பிரதேசம், பாஜ, சிவ்ராஜ் சிங் சவுகான், Madhya Pradesh, BJP, Shivraj Singh Chauhan,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


மத்திய பிரதேச பா.ஜ.,வில் கோஷ்டி மோதல் தீவிரமடைந்துள்ளது மற்றும் ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அம்மாநில முதல்வரை மாற்ற பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நான்காவது முறையாக முதல்வராக உள்ள இவர், பா.ஜ., வின் உயர்மட்ட குழுவான பார்லிமென்ட் குழுவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார்; மாநிலத்திலும் அவருடைய செல்வாக்கு குறைந்து வருகிறது.கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.


latest tamil news



இதைஅடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அக்கட்சியில் பிளவு ஏற்பட்டதால், முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. காங்கிரசில் இருந்து பிரிந்த ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.,வில் இணைந்தார். அவருடன் கணிசமான எம்.எல்.ஏ.,க்களும் வந்ததால், சிவராஜ் சிங் சவுகான், 2020ல் மீண்டும் முதல்வரானார்.
சட்டசபைக்கு அடுத்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், கட்சியில் கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளது. மத்திய அமைச்சராக உள்ள ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் தேசிய பொதுச் செயலர் கைலாஷ் விஜயவர்க்கியா, எலியும், பூனையுமாக இருந்தனர். தற்போது இருவரும் நெருங்கிய நட்பு வைத்துள்ளனர்.
இதற்கிடையே, சில அமைச்சர்கள் வெளிப்படையாகவே, முதல்வர் சவுகானுக்கு எதிராக தங்களுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இவர்கள், சிந்தியாவுடன் காங்கிரசில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது ஒருபுறம் இருக்க, பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


இவ்வாறு திரும்பிய பக்கம் எல்லாம், சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு பிரச்னைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால், வரும் சட்ட சபை தேர்தலுக்கு முன் அல்லது எந்த நேரத்திலும் முதல்வர் பதவியில் இருந்து அவர் துாக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
ஏற்கனவே அசாம், கர்நாடகா, உத்தரகண்ட், குஜராத் என பல மாநிலங்களில் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை பா.ஜ., தலைமை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
09-செப்-202215:26:23 IST Report Abuse
venugopal s சிலரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது என்ற உண்மையை பாஜக உணரும் தருணம் வந்துவிட்டது.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
09-செப்-202210:40:39 IST Report Abuse
பாமரன் இந்நாடாயிது..
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
09-செப்-202210:35:45 IST Report Abuse
Barakat Ali பணம், செல்வாக்கு அதிகமானா பிஜேபியும் வேஸ்ட் ன்னு புரியுது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X