குழவி கல்லால் தாய் கொலை: பாசக்கார மகனுக்கு வலை| Dinamalar

குழவி கல்லால் தாய் கொலை: பாசக்கார மகனுக்கு வலை

Added : செப் 09, 2022 | |
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அருகே குடும்ப தகராறில் தாயின் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர் .விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் மதுரா சாம்பசிவ ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி பாஞ்சாலி, 70: இவரது மகன் விஜயகுமார்,42: டிராக்டர் டிரைவர்: இவர் மதுகுடித்துவிட்டு அடிக்கடி தாயிடம் தகராறு



விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அருகே குடும்ப தகராறில் தாயின் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர் .விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் மதுரா சாம்பசிவ ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி பாஞ்சாலி, 70: இவரது மகன் விஜயகுமார்,42: டிராக்டர் டிரைவர்: இவர் மதுகுடித்துவிட்டு அடிக்கடி தாயிடம் தகராறு செய்வது வழக்கம்.நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டிற்கு வந்த விஜயகுமார் தாயிடம் வழக்கம் போல் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயக்குமார் குழவி கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுள்ளார். இதில் பாஞ்சாலி தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். விஜயகுமார் அங்கிருந்து தப்பினார்.விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் வழக்குப் பதிந்து தலைமறைவான விஜயக்குமாரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X