நவீன ஏவுகணைசோதனை வெற்றி

Added : செப் 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பாலசோர்,:வான் வழியாக வரும் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிக்கக் கூடிய நவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நவீன ஏவுகணை சோதனை, ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ராணுவ மையத்தில் நேற்று நடந்தது.தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணை மிகவும் சிறப்பானதாகும்.
நவீன ஏவுகணைசோதனை வெற்றி

பாலசோர்,:வான் வழியாக வரும் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிக்கக் கூடிய நவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நவீன ஏவுகணை சோதனை, ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ராணுவ மையத்தில் நேற்று நடந்தது.

தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணை மிகவும் சிறப்பானதாகும். எதிரிகள் வானில் இருந்து செலுத்தும் ஏவுகணைகளை அடையாளம் கண்டு, உடனடியாக செயல்பட்டு வானிலையே அதை தாக்கி அழிக்கும் திறன் உடையது இந்த ஏவுகணை.

நம் ராணுவத்தின் படை செல்லும்போது, வானில் இருந்து தாக்குதல் நடத்தினால், அதை முறியடிக்கும் வகையில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. தரையில் பயணம் செய்யும்போதும், வாகனத்தில் இருந்து இதை ஏவ முடியும்.மொத்தம், ஆறு வகையான சோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் துல்லியமாக, வெற்றிகரமாக நடந்ததாக டி.ஆர்.டி.ஓ., கூறியுள்ளது. இந்த முயற்சிக்கு, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
09-செப்-202207:49:56 IST Report Abuse
duruvasar பாகிஸ்தான் சீன கைகூலிகளுக்கு இந்த செய்தி பேரிடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X