பாக்.,கிற்கு ராணுவ உபகரணம் ஒப்புதல் அளித்தது அமெரிக்கா

Added : செப் 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வாஷிங்டன்:பாகிஸ்தான் ராணுவத்திடம் உள்ள 'எப் - 16' ரக போர் விமானங்களின் பராமரிப்பு திட்டத்துக்காக 3600 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை அளிக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் உடைய 'எப் - 16' ரக போர் விமானங்களை அமெரிக்கா 2016ல் பாகிஸ்தானுக்கு அளித்தது. இந்த போர் விமானங்களை பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கு விற்பனை

வாஷிங்டன்:பாகிஸ்தான் ராணுவத்திடம் உள்ள 'எப் - 16' ரக போர் விமானங்களின் பராமரிப்பு திட்டத்துக்காக 3600 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை அளிக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் உடைய 'எப் - 16' ரக போர் விமானங்களை அமெரிக்கா 2016ல் பாகிஸ்தானுக்கு அளித்தது. இந்த போர் விமானங்களை பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கு விற்பனை செய்வதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்த முடிவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

பயங்கரவாத நடவடிக்கைகளை பாக். அரசு கட்டுப்படுத்த தவறியதை அடுத்து அவர்களுக்கு அளித்து வரும் ராணுவ உதவிகளை 2018ல் அமெரிக்கா நிறுத்தி வைத்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாக்.கிற்கான 16 ஆயிரம் கோடி ரூபாய் உதவித் தொகையை ரத்து செய்தார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின் பாக்.கிற்கான ராணுவ ரீதியிலான உதவிகளை மீண்டும் செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்த வகையில் எப் - 16 ரக போர் விமானங்களை பராமரிக்க தேவையான 3600 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் எதிர்காலத்தில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படக் கூடிய உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
canchi ravi - Hyderabad,இந்தியா
11-செப்-202203:45:59 IST Report Abuse
canchi ravi vaanga panam engirunthu varugirathu?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X