உதயம்பாக்கம் சந்திரமவுலீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் விமரிசை

Added : செப் 09, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:உதயம்பாக்கம் காமாட்சி அம்பாள் சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம், விமரிசையாக நடந்தது.செங்கல்பட்டு அடுத்த, பாலாற்றங்கரை பகுதி உதயம்பாக்கம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு சந்திரமவுலீஸ்வரர், காமாட்சி அம்பாள், வித்யா கணபதி, பாலசுப்பிரமணியர், தர்ம சாஸ்தா, காமகோடி பீடம் 66வது பீடாதிபதி
உதயம்பாக்கம் சந்திரமவுலீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் விமரிசை

செங்கல்பட்டு:உதயம்பாக்கம் காமாட்சி அம்பாள் சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம், விமரிசையாக நடந்தது.
செங்கல்பட்டு அடுத்த, பாலாற்றங்கரை பகுதி உதயம்பாக்கம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு சந்திரமவுலீஸ்வரர், காமாட்சி அம்பாள், வித்யா கணபதி, பாலசுப்பிரமணியர், தர்ம சாஸ்தா, காமகோடி பீடம் 66வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வீற்று, அருள்பாலிக்கின்றனர்.
ஒரு கோடி ரூபாய் மதிப்பில், கோவில் முழுதும் கருங்கற்களால் கட்டும் பணி, ஐந்து ஆண்டு களாக நடந்து வந்தது. இரு மாதங்களுக்கு முன், திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன.தொடர்ந்து, இக்கோவிலின் மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி, 5ம் தேதி யாகசலை பூஜை துவங்கி, ஹோமங்கள், ஐந்து கால பூஜைகள் நடந்தன.
காலை 11:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.பின், சந்திரமவுலீஸ்வரர், காமாட்சி அம்பாள், வித்யா கணபதி, பாலசுப்பிரமணியர், தர்மசாஸ்தா, காமகோடி பீடம் 66வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. உதயம்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்ேகற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X