கன்டெய்னர் மீது பஸ் மோதல் ஆறு பயணியர் பலத்த காயம்

Added : செப் 09, 2022 | |
Advertisement
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்பட்ட கன்டெய்னர் லாரி மீது ஆம்னி சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், ஆறு பேர் காயமடைந்தனர்.திருச்சியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு 40 பயணியருடன் புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. தஞ்சாவூர், பூதலுார் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன், 31, என்பவர், பேருந்தை
கன்டெய்னர் மீது பஸ் மோதல் ஆறு பயணியர் பலத்த காயம்

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்பட்ட கன்டெய்னர் லாரி மீது ஆம்னி சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், ஆறு பேர் காயமடைந்தனர்.
திருச்சியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு 40 பயணியருடன் புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. தஞ்சாவூர், பூதலுார் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன், 31, என்பவர், பேருந்தை ஓட்டினார்.
திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலை, பாக்கம் பகுதியில் நேற்று அதிகாலை வந்த பேருந்து, சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 40 பேரில் நான்கு பெண்கள், இரு ஆண்கள் உட்பட ஆறு பேர் பலத்த காயமடைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், படுகாயம் அடைந்தோரை மீட்டு, '108' ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர்.
விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், கரூரில் சரக்கு ஏற்றி சென்னைக்கு வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரியை, கரூர் மாவட்டம், சித்தமணிபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமலைசாமி, 64, என்பவர் ஓட்டி வந்தது தெரியவந்தது. இவர், சாலையோரம் லாரியை நிறுத்தி, கடைக்கு டீ குடிக்க சென்றதும் தெரிந்தது
.இதையடுத்து, விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, ஓட்டுனர் திருமலைசாமியிடம் விசாரித்து வருகின்றனர்.மதுராந்தகம் சமூக ஆர்வலர் திலகராஜ், 47, என்பவர் கூறியதாவது:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கங்களிலும், அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்படுகிறது.
ஆங்காங்கே உள்ள தேநீர் கடைகள் முன் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், இவ்வாறான விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன. இதற்கு, போலீசார் கடிவாளம் போட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X